டீம்ல இருக்குறதே 11 பேரு.. அவங்க பேர கூடவா ஒழுங்கா சொல்ல முடியாது.. பாண்டியாவை காட்டமாக விமர்சித்திருக்கும் கும்ப்ளே.. நடந்தது என்ன?

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடுகளை முன்னாள் இந்திய வீரர் அனில் கும்ப்ளே காட்டமாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

17 வது ஐபிஎல் சீசன் தொடர் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், இதில் ஐந்தாவது போட்டியாக மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் குஜராத் அணி6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

குஜராத் அணியிலிருந்து விலகி மும்பை அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவின் மீது முதல் போட்டியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. மும்பை அணியில் முதலில் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவின் ஒப்புதலுடனே ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டாரா? என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.

- Advertisement -

மேலும் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டது முதல் மும்பை அணி வீரர்களான பும்ரா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் தங்களது அதிருப்தியை சமூக வலைதளங்களில் வெளிப்படையாகவே தெரிவித்தனர். இந்நிலையில் அணி வீரர்களுக்கும் அவருக்கும் இடையேயான புரிதல் எந்த அளவிற்கு உள்ளது, கேப்டனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அனைவரும் நடக்கிறார்களா? என்பது போன்ற எதிர்பார்ப்பு நிலவியது.

அணி வீரர்கள் அனைவரும் நன்றாகவே ஒத்துழைத்த நிலையில், ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி செயல்பாடு சற்று விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. உதாரணமாக ரோகித் சர்மா கடந்த பத்து வருடங்களாக 30 யார்டு சர்க்கிலில் மட்டுமே ஃபீல்டிங் செய்து கொண்டிருக்கிறார். அவரைத் தேவையே இல்லாமல் பௌண்டரி லைனுக்கு அருகே அங்கும் இங்கும் அலைய விடுவது போன்ற வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில் மற்றுமொரு நிகழ்வாக முன்னாள் இந்திய வீரர் அனில் கும்பிளே வர்ணனையின் போது

- Advertisement -

“ஹர்திக் பாண்டியா டாசின் போது வீரர்களின் பெயர்களை குறிப்பிடுவதில்லை. மாறாக பிளேயிங் லெவனில் நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள், மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஏழு பேட்ஸ்மேன்கள் என்று பொதுவாகவே தெரிவித்து செல்கிறார். ஒரு அணியில் 11 வீரர்கள் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் ஹர்திக் பாண்டியாவுக்கு அவ்வாறு கூறி பழக்கம் இல்லை. எனவே இதை நான் அவரிடம் இருந்து எதிர்பார்ப்பதில்லை என்று கிண்டலாக கூறியிருக்கிறார்.

மேலும் மும்பை அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அணி நிர்வாகமும் அவர் மீது சற்று அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த தடைகளை கடந்து ஹர்திக் பாண்டியா வெற்றிகரமான கேப்டனாக முன்னேறுவார் என்று எல்லோராலும் நம்பப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles