சின்னச்சாமி கோலியோட கோட்டையா இருக்கலாம்.. ஆனால் சேப்பாக்கம்ல சென்னை தான் ராஜா..ஹர்பஜன் சிங் பேட்டி

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வருகிற 22ஆம் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

- Advertisement -

இந்நிலையில் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பயிற்சி ஆட்டத்தில் பங்குபெறும் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பைப் பெற்று வருகிறது. விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் தற்போது பயிற்சியைத் தொடங்கி இருக்கிறது. நட்சத்திர வீரர்கள் மோத உள்ள இப்போட்டிக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

என்னதான் பெங்களூர் அணி நட்சத்திர வீரர்களை கொண்டிருந்தாலும், அந்த அணியால் இன்னும் ஒரு ஐபிஎல் டைட்டிலை கூட அடிக்க முடியவில்லை என்பது சோகமான ஒன்று. மேலும் பெங்களூரு அணி சென்னைக்கு எதிரான போட்டியில் இதுவரை பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.

- Advertisement -

பெங்களூர் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி மற்ற அணிகளுடன் அவர் சிறப்பாக விளையாடினாலும், சென்னை அணிக்கு எதிராக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மேலும் இங்குள்ள சுழற் பந்துவீச்சு சூழ்நிலைக்கு சென்னை அணியின் பந்துவீச்சாளர்களே அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.

முத்தையா முரளிதரன் தொடங்கி ஹர்பஜன் சிங் வரை சென்னை மைதானம் என்றால் விக்கெட்டுகளை போட்டி போட்டுக் கொண்டு எடுப்பார்கள். இந்நிலையில் சென்னை அணிக்காக ஐபிஎல் விளையாடிய ஹர்பஜன் சிங் பெங்களூர் மைதானத்திற்கும், சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது என்றும், விராட் கோலி சென்னை மைதானத்தில் பெரிதாக சாதிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும் பொழுது

- Advertisement -

“சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விராட் கோலியின் செயல்பாடு பெரிய அளவில் இருந்ததில்லை என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் சென்னை அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளர் ஆன ரவீந்திர ஜடேஜா இருக்கிறார். அவர் பந்தினை நேராக ஸ்டம்புகளுக்கு வீசும் திறன் கொண்டவர். அவரது பந்துவீச்சில் பெரிய அளவு மாற்றம் இல்லை என்றாலும் ஒரு பந்து சுழலும், ஒரு பந்து நேராகச் செல்லும்.

விராட் கோலி ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆட விரும்பினால் ஆட்டம் முழுவதிலும் நின்று விளையாட வேண்டும். பெங்களூர் அணியில் அவர் அடிக்கும் இரண்டு சதங்கள் கூட, சேப்பாக்கம் மைதானத்தில் சிறப்பாக விளையாட நம்பிக்கையை தராது. 2016ம் ஆண்டு விராட் கோலி மிகச் சிறந்த பார்மில் இருந்தார். இந்தத் தொடரிலும் அவர் அதே பேட்டிங் தன்மையுடன் விளையாட வேண்டும். அப்போதுதான் பெங்களூர் அணிக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும்.மேலும் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர்கள் மேக்ஸ்வெல், பட்டித்தார், டு பிளஸ்ஸி ஆகியோர் உள்ளனர்.அவர்களும் பெங்களூரு அணிக்கு வலுவை சேர்க்கின்றனர் என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles