சிஎஸ்கே சும்மா ஜெயிக்கலாம்னு நினைச்சேன்.. அந்த சம்பவம் வேற மாதிரி ஆயிடுச்சு – ரகானே புலம்பல்

நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்விக்கான காரணம் குறித்து அந்த அணியின் கேப்டன் ரகானே பேசியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் பேசும்போது “உண்மையில் இந்த சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தில் 190 ரன்னில் சிஎஸ்கேவை கட்டுப்படுத்தியது சந்தோசமாக இருந்தது. எங்களால் இந்த ஸ்கோரை எட்டிப் பிடிக்க முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்பினோம். பவர் பிளேவில் பெரிய ரன் சிஎஸ்கே எடுத்த போதும் அவர்களை தடுத்தது அருமையாக இருந்தது”

- Advertisement -

“அதே சமயத்தில் பவர் பிளேவில் அவர்கள் சிறப்பாக செயல்பட நாங்கள் பவர் பிளேவில் 36 ரன்கள் மட்டுமே எடுத்தோம். இதுதான் போட்டியின் முடிவில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி விட்டது. நாங்கள் சரியாக செயல்படாமல் தோல்வியடைந்தோம்”

- Advertisement -

“கடந்த இரண்டு போட்டிகளாக எங்கள் அணியின் காம்பினேஷன் சரியாகவே இருக்கிறது. ஆனால் அணி தோல்வி அடையும் பொழுது காம்பினேஷன் குறித்து நிச்சயம் சந்தேகிக்கப்படும். இப்பொழுது நாங்கள் நம்பிக்கை உடன் தலையை உயர்த்தி வைத்திருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles