கப் ஜெயிச்சுட்டு வாங்க விராட்.. தோனி கூறி அந்த வார்த்தை.. நெகிழ்ச்சியில் விராட் கோலி

மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலி நட்பு குறித்து யாரும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. இந்திய அணியில் இவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போதே இவர்களிடையே ஆன நட்பு என்பது அபரிமிதமானது.

- Advertisement -

ஏனெனில் விராட் கோலி இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க முக்கிய காரணமாக அமைந்தவர் மகேந்திர சிங் தோனி. அப்போதிருந்தே மகேந்திர சிங் தோனியை தனது கேப்டனாகவே விராட் கோலி பார்த்தார்.

- Advertisement -

தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது கேப்டன்சியை விட்டு விலகிய நேரத்தில், தனக்கு அடுத்ததாக விராட் கோலி இந்திய அணியை வழிநடத்த தகுதியான நபர் என்று கோலியை கைகாட்டினார். மேலும் நட்பு என்பதை தாண்டி களத்தில் இருவருக்கும் இடையேயான புரிதல் மிகவும் அபாரமானதாக இருக்கும்.

- Advertisement -

இந்திய அணிக்காக இருவரும் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது இரண்டு ரன்கள் ஓடிய நிலையில், மூன்றாவது ரன்னுக்கு தோனி கோலியையோ கோலி தோனியையோ அழைக்க வேண்டிய அவசியம் இல்லை. பந்து சற்று தூரத்தில் இருந்தாலும் மூன்றாவது ரன்னை எடுக்க முடியும் என்று நினைத்தால் இருவரும் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து மூன்றாவது ரன்னுக்கு தானாகவே ஓடி விடுவார்கள்.

அந்த அளவுக்கு அவர்களுக்குள்ளான புரிதல் ஆச்சரியப்பட வைக்கும். மேலும் விராட் கோலி கேப்டனாக இருந்த சமயத்தில் மகேந்திர சிங் தோனி ரிவ்யூ ஏதாவது எடுக்க வலியுறுத்தினால் விராட் கோலி ஏன்? எதற்கு? என்று கேட்காமல் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ரிவியூற்கு செல்வார். அந்த அளவு தோனி மீது நம்பிக்கையும், மிகுந்த மரியாதையும் கொண்டுள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த சூழ்நிலையில் வெற்றி பெற்ற பின்னர் விராட் கோலி நேராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோனியின் ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு சென்று தோனியை சந்தித்து பேசி பேசி இருக்கிறார்.

இதையும் படிங்க:வெறும் 2 மாதம் விளையாடிவிட்டு வீடு திரும்புவது அல்ல.. சிஎஸ்கேதான் எனது பலம்.. சிஎஸ்கேதான் எனது எமோஷன்.. முதல்முறையாக பேட்டி அளித்த தோனி

அப்போது இந்த முறை நீங்கள் கோபையே வெல்ல வேண்டும் என்று மகேந்திர சிங் தோனி விராட் கோலியிடம் கூறியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கிளப் கிரிக்கெட்டுக்காக இருவரும் வேறு வேறு அணிகளில் விளையாடினாலும், வெற்றி தோல்வி என்பதை தாண்டி இவர்கள் இருவருக்கும் இடையேயான நட்பு ஒருபோதும் பாதிக்காது என்று இந்தக் காட்சியை உதாரணம். நாளை நடைபெற உள்ள எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles