சச்சினுக்கும் தோனிக்கும் பண்ணது பத்தாதா.. இப்ப இவங்களுக்கும் அதே மாதிரினா எப்படி- உத்தப்பா எதிர்ப்பு

நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தற்போது டி20 ஃபார்மேட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் கவனம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக நடைபெற இருக்கும் சாம்பியன் டிராபி மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் இவர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

- Advertisement -

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஒன்றாக இணைந்து 15 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்கள். 2007ஆம் ஆண்டு ரோஹித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானபோது தோனி தலைமையிலான இளம் இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்றது. ரோகித் சர்மா அறிமுகமான ஒரு வருடத்திலேயே 2008 ஆம் ஆண்டு விராட் கோலியின் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார்.

- Advertisement -

2011ஆம் ஆண்டு அவர் இடம் பெற்று இருந்த இந்திய அணியில் தோனி தலைமையிலான அனுபவம் வாய்ந்த அணி ஒரு நாள் உலகக் கோப்பையையும் என்று அதை ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு சமர்ப்பிக்கப்பட்டது. கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சினுக்கும், வெற்றிகரமான இந்திய கேப்டன் என்று அழைக்கப்பட்ட மகேந்திர சிங் தோனிக்கும் அவர்கள் ஓய்வு பெறும் தருவாயில் அவர்களின் ஜெர்சி எண்ணான ஏழு மற்றும் பத்தாம் நம்பருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஓய்வு அளித்தது.

அதாவது அவர்களுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகும் இந்திய வீரர்கள் அந்த எண்களை பயன்படுத்த முடியாது. இந்த சூழ்நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா டி20 ஃபார்மேட்டில் ஓய்வு பெற்ற நிலையில் அவர்களின் எண்களான 18 மற்றும் 45 நம்பர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் தரப்பில் கருத்துக்கள் நிலவி வருகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார். இது குறித்து உத்தப்பா கூறும் பொழுது “இப்படியே அனைத்து நம்பர்களுக்கும் ஓய்வு கொடுத்து விட்டால் எதிர்காலத்தில் அறிமுகமாகும் இளம் வீரர்கள் அவர்களுக்கு பிடித்த எண்களை ஜெர்சியில் பயன்படுத்த முடியாது. ஏற்கனவே மகேந்திர சிங் தோனி மற்றும் சச்சின் ஆகியோரின் எண்களான 7 மற்றும் 10 ஆகிய நம்பர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பண்ட்டால இப்போ இந்தியால ஒரு விஷயம் மாறி இருக்கு.. அவர் எங்கள மாதிரி இல்ல- பதான் பாராட்டு

அந்த வகையில் தற்போது இந்த இரண்டு நம்பர்களுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும் என்பது ஏற்கத்தக்கது அல்ல. என்னைப் பொறுத்தவரை இது ஒரு சரியான அணுகு முறை கிடையாது” என்று கூறியிருக்கிறார். உத்தப்பாவின் கருத்துக்கு தற்போது ரசிகர்கள் ஒரு தரப்பில் ஆதரவும் மறு தரப்பில் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles