இந்த டி20 உலக கோப்பையில் ஒட்டுமொத்த இந்திய வீரர்களுமே சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு உலக கோப்பையை பெற்றுத் தந்துள்ளனர். ஒவ்வொரு போட்டியிலும் அனைத்து வீரர்களுமே தங்களது சிறந்த பங்களிப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
அதில் முக்கியமாக கவனிக்கப்படக்கூடிய வீரர் ரிஷப் பண்ட். மிகப்பெரிய விபத்திற்கு பிறகு இவரால் டி20 உலக கோப்பை விளையாட முடியுமா? என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் ஐபிஎல் தொடரில் தன்னை நிரூபித்து உலக கோப்பையில் விராட் கோலியின் இடத்தில் களம் இறங்கினார்.
அந்த இடம் மிகப்பெரிய பொறுப்பாக இருந்தாலும் எந்த ஒரு அச்சமும் இல்லாமல் தனது வழக்கமான மெருகேற்றப்பட்ட ஷாட்களை விளையாடி, தனது முக்கியத்துவத்தை இந்திய அணிக்கு உணர்த்தினார். விக்கெட் கீப்பிங்கிலும் தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.
கடந்த உலகக் கோப்பை தொடரில் 10 முறை ஆட்டமிழக் செய்த பண்ட், இந்த முறையை 14 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்து தனது முந்தைய சாதனையை முறியடித்து இருக்கிறார். மேலும் தனது சிறந்த பேட்டிகளின் மூலம் இந்திய முன்னாள் வீரர் இர்ஃபான் பதானால் பெரிதாக ஈர்க்கப்பட்டு இருக்கிறார்.
பண்ட் குறித்து இர்பான் தான் விரிவாக கூறும்பொழுது “முதலாவதாக பண்ட்டின் விக்கெட் கீப்பிங்கைப் பாராட்டியாக வேண்டும். இவ்வளவு பெரிய காயத்திற்கு பிறகு ஒரே உலகக் கோப்பை போட்டியில் 10 பேரை ஆட்டமிழக்கச் செய்த தனது முந்தைய சாதனையை 14 பேரை இந்த உலகக் கோப்பையில் ஆட்டமிழக செய்ததன் மூலம் அதை முறியடித்து இருக்கிறார். அவர் பிடித்த பல கேட்சுகள் மிகவும் சிறப்பானது. ஒரு குறிப்பிட்ட போட்டியில் அவரது செயல் திறனுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
இருப்பினும் அவற்றைக் கடந்து தற்போது தனது ஒட்டுமொத்த கீப்பிங் திறன் மூலம் இந்திய அணிக்கு பெரிய பங்களிப்பை வழங்கி இருக்கிறார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர் எடுத்த இன்சைட் எட்ஜ் கேட்ச் மிகவும் முக்கியமானது. ஒருவேளை அவர் அந்த கேட்ச் எடுக்காமல் இருந்திருந்தால் நான்கு ரன்கள் கூடுதலாக சென்று அர்ஸ்தீப் சிங் மீது அழுத்தம் அதிகமாக இருக்கும். அந்த நிலையில் மிகக் கூர்மையாக செயல்பட்டார்.
இதையும் படிங்க:இப்படி ஒரு அன்பு எனக்கு இனி கிடைக்காது.. தோல்விக்கு பிறகான இந்த உணர்வு மிகப்பெரியது- டிராவிட் உருக்கம்
அவரது பேட்டிங் பற்றிக் கூறினால் இந்தியாவுக்கு பொதுவாக முதல் விக்கெட் இழந்தால் அதற்குப் பிறகு சுதந்திரம் இருக்காது. எங்களது பழமை வாய்ந்த அணுகுமுறையை கடந்த உலக கோப்பையின் மூலம் தனது அச்சமற்ற அதிரடியாக விளையாடும் அணுகுமுறையால் அதை மாற்றியமைத்திருக்கிறார். இருப்பினும் அவரது ஆபத்தான சில ஷாட்களால் அவர் விமர்சிக்கப்படலாம். ஆனால் அச்சமின்றி தைரியமாக விளையாடுவதை பாராட்ட வேண்டும். மற்ற கிரிக்கெட் வீரர்களைப் போல நாம் பண்ட்டை ஆதரிக்க வேண்டும். ரோகித் சர்மாவுடன் இணைந்து ஒரு அச்சமற்ற டாப் ஆர்டருக்கு முக்கிய காரணியாக அமைந்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்

