இப்படி ஒரு அன்பு எனக்கு இனி கிடைக்காது.. தோல்விக்கு பிறகான இந்த உணர்வு மிகப்பெரியது- டிராவிட் உருக்கம்

இந்திய அணி டி20 உலக கோப்பை வெற்றி பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு மறக்க முடியாத தருணமாக அமைந்திருக்கிறது. இந்த வெற்றியுடனேயே தனது பயிற்சியாளர் பதவியை விட்டு விலகி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து நேற்று நடைபெற்ற வெற்றி விழாவில் பேசிய போது டிராவிட் சில உணர்ச்சி மயமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

2021ஆம் ஆண்டு இந்திய அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்ற ராகுல் டிராவிட், அவரும் ரோஹித் சர்மாவும் இணைந்து இந்திய அணியை முன்னேற்ற பாதையில் செலுத்த சில தைரியமான முடிவுகளை எடுத்து இந்திய அணியில் புகுத்தினர். அதன் விளைவு வரிசையான வெற்றிகளை பெற்று வந்த இந்திய அணி முக்கியமான ஐசிசி தொடர்களில் இறுதி போட்டியில் மட்டும் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதிப் போட்டி மற்றும் 2023ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை இறுதி போட்டி என்று வெற்றி பெற வேண்டிய தருணங்களில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில் மனமுடைந்த ராகுல் டிராவிட் தனது பயிற்சியாளர் பதவியை விட்டு விலகுவதாக அறிவிக்க, இதை அறிந்த ரோகித் சர்மா டிராவிட்டை சமாதானப்படுத்தி டி20 உலக கோப்பை வரையிலாவது எங்களுடன் இருங்கள் என்று கூறியிருக்கிறார்.

இந்த முறை எப்படியாவது உலக கோப்பையை வென்று விட வேண்டும் என்று களத்தில் குறித்த இந்திய அணி அதை தற்போது நிறைவேற்றியும் காட்டி இருக்கிறது. இந்த மகிழ்ச்சியான தருணம் குறித்து பேசிய ராகுல் டிராவிட் இது குறித்து விரிவாக கூறும்பொழுது “இது நான் கையெழுத்திட்டு செல்வதற்கான அருமையான வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இது போன்ற அன்பை நான் இனி பெற நிச்சயமாக வாய்ப்பில்லை. அருமையான வீரர்கள், அற்புதமான ஊழியர்களுடன் பணி புரியும் வாய்ப்பை நான் கண்டிப்பாக மிஸ் செய்வேன்.

- Advertisement -

இதை ஒப்புக் கொள்வதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. இன்று நான் பார்த்துக் கொண்டிருப்பது இந்திய அணி எவ்வளவு புத்திசாலித்தனமானது என்பதை நிரூபிக்கிறது. வீரர்கள் அனைவரும் ஒரு குடும்பத்தை போன்ற உணர்வை கொடுத்தார்கள். அனைவருமே கடுமையான உழைப்பை வழங்கக் கூடியவர்கள். ஒரு பயிற்சியாளர் என்ற வகையில் நான் இதற்கு மேல் இவர்களிடம் எதையும் கேட்க முடியாது. இவர்களுடன் பணி புரிந்தது எனக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு.

இதையும் படிங்க:19 வயது சிறுவனாக விளையாட ஆரம்பித்தேன்.. எனது ஓய்வு எப்போது என்று கேட்டால்.. பும்ரா சுவாரசியமான பேட்டி

மேலும் ரோகித் சர்மாவிடம் நான் இந்த இடத்தில் நன்றி கூற வேண்டும். 2023 உலக கோப்பைக்கு பிறகு மேலும் ஒரு ஆறு மாத காலம் எங்களுடன் இருங்கள் என்று கூறினார். அவரது போன் கால் மட்டுமே எனது வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது அவருக்கு நன்றி” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles