இந்த இந்திய வீரர்கிட்ட கவனமா இருங்க.. டீம்ல இடம் பிடிக்க நம்மளதான் யூஸ் பண்ணுவாரு- எச்சரிக்கும் ஜிம்பாப்வே பயிற்சியாளர்

சீனியர் வீரர்கள் கொண்ட அணி டி20 உலக கோப்பை வென்ற சந்தோஷத்தில் இளம் இந்திய அணி தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

- Advertisement -

இந்தத் தொடர் குறித்த ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளர் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் கலக்கிய இந்திய இளம் வீரர்களைக் கொண்டு கில் தலமையிலான இந்திய அணி தற்போது விவிஎஸ் லட்சுமணன் தலைமை பயிற்சியில் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில் இந்தப் போட்டிக்காக இரண்டு அணி வீரர்களும் தற்போது மிகத் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

- Advertisement -

டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்காத அணியின் கேப்டன் கில் இந்தத் தொடரை பயன்படுத்தி தனது கேப்டன்சியை நிரூபிக்கும் கட்டாயத்தில் இருக்கிறார். எனவே ரோகித் சர்மாவிற்கு பிறகு இவருக்கே கேப்டனாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் ஐபிஎல் தொடரில் கலக்கிய ரியான் பராக் மற்றும் சாய் சுதர்சன் போன்ற நட்சத்திர வீரர்கள் இருப்பதால் ஜிம்பாப்வே அணி இந்த இளம் படையை அவ்வளவு சாதாரணமாக எடை போடாது.

இது குறித்து ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளர் ஜாஸ்டின் சம்மோன்ஸ் கில் குறித்தும், ரியான் பராக் குறித்தும் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது “கில் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். அவரை முதல் முதலில் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. நான் தென்னாப்பிரிக்கா அணியோடு இருந்தேன் என்று நினைக்கிறேன். 2021ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரில் நாங்கள் விளையாடிக் கொண்டிருந்த போது அப்போது கில்லுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் அப்போது அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

- Advertisement -

அந்த டெஸ்ட் தொடரின் போது அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட விதம் சிறுவனாக இருந்தாலும் அவர் தொழிலில் காட்டிய பக்தி மற்றும் ஒழுக்க நெறிமுறைகள் என்னை ஆச்சரியப்பட வைத்தது. இப்போதுள்ள இளம் இந்திய வீரர்கள் அச்சமின்றி கிரிக்கெட் விளையாடக் கூடிய ஆபத்தானவர்கள். அவர்கள் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் தங்களை நிரூபித்துள்ளார்கள். அதிலும் குறிப்பாக ரியான் பராக் எவ்வளவு ஆபத்தான வீரர் என்பதை பார்க்கலாம். நடப்பு ஐபிஎல் தொடரில் அவரது பங்களிப்பு என்ன என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

இதையும் படிங்க:விராட் கோலி, ரோகித் போனா என்ன… இனி டி20க்கு ஓப்பனிங், நம்பர் 3 பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்! – கேப்டன் ஆனவுடன் கில் அதிரடி முடிவு!

மீண்டும் அவருக்கு இந்தியாவுக்கு விளையாட அவருக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை அவர் நிச்சயம் பயன்படுத்திக் கொள்வார். மேலும் சிறந்த வீரர்களுக்கு எதிராக தங்களை சோதித்துப் பார்க்க ஜிம்பாப்வே வீரர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது” என்று கூறி இருக்கிறார். ஹரேராவில் இன்று மாலை நான்கு முப்பது மணிக்கு முதல் டி20 போட்டி நடைபெற இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles