நாங்கள் சிறந்த அணி என்பதை நிரூபிக்காமல் விடமாட்டோம்.. எங்கே தவறு செய்தோம் என்பதில் கவனம் செலுத்தினோம்.. வெற்றிக்குப் பின்னர் டூ பிளஸ்சிஸ் பேட்டி

தரம்சாலா மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய 58 வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது.

- Advertisement -

இப்போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் டூ ப்ளஸ்சிஸ் தோல்வி பாதையில் இருந்து ஆர்சிபி எப்படி மீண்டு வந்தது என்பது குறித்து விளக்கியிருக்கிறார்.

- Advertisement -

இப்போட்டியில் டாசை இழந்த பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் இரண்டு விக்கெட்டுகளை மிக விரைவிலேயே இழந்தாலும், அதற்குப் பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் பட்டிதார் கூட்டணி பெங்களூர் அணி ரன்களை வெகுவாக உயர்த்தியது. 32 பந்துகளில் 76 ரன்கள் குவித்த இந்த கூட்டணியில் 55 ரன்களில் பட்டிதார் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

அதற்குப் பிறகு கேமரூன் கிரீன் 27 பந்துகளில் 46 ரன்கள் குவிக்க மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான விராட் கோலி அற்புதமாக விளையாடி 47 பந்துகளில் ஏழு பவுண்டரிகள், ஆறு சிக்சர்கள் என 92 ரன்கள் குவித்தார். இவர்கள் மூவரின் அபார ஆட்டத்தின் மூலம் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 241 ரன்கள் குவித்தது.

பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி பெங்களூர் அணியின் மிகச் சிறப்பான பந்துவீச்சினால் 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரூசோ 27 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள் மூன்று சிக்சர்கள் என 61 ரன்கள் குவித்தார். மற்றொரு ஆட்டக்காரர்கள் சஷாங்க் சிங் 19 பந்துகளில் 37 என்று குவித்தார். இருப்பினும் இவர்களது போராட்டம் விரைவிலேயே முடிவுக்கு வந்தது.

- Advertisement -

இந்த வெற்றிக்கு பின்னர் பெங்களூர் அணியின் கேப்டன் டூப்ளசிஸ் வெற்றிக்கான காரணங்கள் குறித்து பேசி இருக்கிறார். இது குறித்து அவர் கூறும் பொழுது
“இது நிஜமாகவே அற்புதமான ஆட்டமாக இருந்திருக்கிறது. நாங்கள் டாஸ் தோற்று இருந்தாலும் 240 ரன்களுக்கு மேல் குவித்து வெற்றி பெற்றது சிறப்பான அனுபவம். நாங்கள் தோல்வி பாதையில் இருந்த போது என்னென்ன தவறுகள் செய்தோம் என்பது குறித்து விவாதித்தோம். பவர் பிளேவில் விக்கெட்டுகள் எடுக்காதது, அதிகமாக ரன்கள் குவிக்காதது என அனைத்தையும் கலந்து ஆலோசித்து அதற்காக நாங்கள் முன்னேறி இருக்கிறோம்.

இதையும் படிங்க:நான் ரிஸ்க் எடுத்துதான் ஆக வேண்டும்.. ஸ்டிரைக் ரேட் எனக்கும், எனது அணிக்கும் மிகவும் முக்கியம்.. வெற்றிக்குப் பின்னர் விராட் கோலி பேச்சு

தற்போது எங்கள் பந்துவீச்சில் நிறைய விருப்பங்கள் இருக்கின்றன. உங்களது பக்கத்தில் ஃபார்ம் இருக்க வேண்டும். அதே நேரத்தில் அதிர்ஷ்டமும் சேர்ந்து இருக்க வேண்டும். அந்த இரண்டும் சேர்ந்து இருந்தால்தான் வெற்றி உங்கள் கைகளில் கூடிவரும். எங்களிடம் அதிரடியாக ரன்கள் குவிக்கவும், விக்கெட்டுகளை விரைவாக எடுக்கவும் சிறந்த வீரர்கள் அணியில் இருக்கின்றனர். எங்களால் எதையும் மாற்ற முடியும் என்பதை நாங்கள் நிரூபித்து இருக்கிறோம் நாங்கள் சிறந்த அணி என்பதையும் நிரூபிக்காமல் விடமாட்டோம்” என்று பேசி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles