ஐசிசி டி20 உலக கோப்பையில் பங்கேற்பதற்காக இந்திய அணி தற்போது அமெரிக்கா சென்றுள்ளது. இதை அடுத்து இந்திய அணி பயிற்சி பெறும் புகைப்படங்களும் சமீபத்தில் இணையதளங்களில் வெளிவந்தது.
தனது முதல் போட்டியாக ஜூன் 6ஆம் தேதி இந்திய அணி அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இதற்குப் பிறகு ஜூன் 9ஆம் தேதி மிக முக்கிய போட்டியாக கருதப்படும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய கிரிக்கெட்டில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கடந்த பத்து வருடங்களில் இந்தியாவுக்காக பல சிறப்பான வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளனர். ஆனால் ஜாம்பவான் வீரர்களாக உருவெடுத்த பின்னர் இதுவரை ஒரு ஐசிசி கோப்பையையும் வென்றதில்லை என்ற சோகம் நீடிக்கிறது. கடைசியாக தோனி தலைமையில் 2013ம் ஆண்டு இவர்கள் இருவரும் விளையாடி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இங்கிலாந்தில் வென்று கொடுத்தனர்.
அதன் பின்னர் விளையாடிய அனைத்து ஐசிசி போட்டிகளிலும் இந்திய அணி நாக் அவுட் சுற்றோடு வெளியேறி விடுகிறது, அல்லது இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவுகிறது. இதில் ரோஹித் சர்மா 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையை வென்றுள்ளார். ஆனால் விராட் கோலி 2014, 2016ம் ஆண்டுகளில் டி20 உலக கோப்பையில் தொடர் நாயகன் விருது பெற்ற போதிலும் கூட கோப்பையை கைப்பற்ற முடியவில்லை.
தற்போது இருவருக்குமே 35 வயதாகி வரும் சூழ்நிலையில் இதுவே இவர்களுக்கு கடைசி டி20 உலக கோப்பையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதற்குப் பிறகு பிசிசிஐ இளம் பிளேயர்களை உள்ளே கொண்டு வந்து விடும். இதனால் இந்த உலகக்கோப்பையில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி ஆகிய இரண்டு நாட்களை கவனமாக விளையாடி வென்று கொடுக்குமாறு இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து கை விரிவாக கூறும்பொழுது
“நாம் இனி நீண்ட காலம் கிரிக்கெட் விளையாடப் போவதில்லை என்று ரோஹித் சர்மாவுக்கு நன்றாகவே தெரியும். இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் மட்டுமே விளையாடுவார். விராட் கோலிக்கும் தற்போது அதே நிலைமைதான். அவர்கள் அகமதாபாத்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை இறுதி போட்டியில் தோல்வியடைந்தனர். அந்தத் தொடரில் சிறப்பாக விளையாடியும் கோப்பையை வெல்ல முடியாததால் இந்திய ரசிகர்களின் இதயம் உடைந்தது.
இதையும் படிங்க:பிளாங்க் செக்லாம் வேண்டாம்.. எனக்கு இந்தியாதான் முக்கியம்.. கௌதம் கம்பீர் செய்த காரியம்.. நடந்தது என்ன?
இந்த முறை டி20 உலக கோப்பையில் லீக் சுற்றில் பெரிய போட்டிகள் இல்லை. அரை இறுதி மற்றும் இறுதி போட்டி மட்டுமே இந்தியாவிற்கு பெரிய அணிகளோடு போட்டி இருக்கும். எனவே அந்த இரண்டு நாட்கள் மட்டுமே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு மிகப் பெரிய சோதனையாக இருக்கும். அதை அவர்கள் வெற்றிகரமாக கடந்து விட்டால் உலகக்கோப்பை நம் கைகளில் ஏந்தலாம்” என்று முகமது கைப் கூறியிருக்கிறார்

