IND vs ENG.. 3 ரன் 3 விக்கெட்.. இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா முதலிடம்.. 6-க்கு 6 வெற்றியுடன் அரை இறுதியில் நுழைந்ததா இந்தியா.?

உலகக்கோப்பையின் 29 வது ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று லக்னோவில் வைத்து மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் கில் ஆகியோர் களமிறங்கினர்.

- Advertisement -

இந்த உலகக்கோப்பையும் பொழுது தவம் சிறப்பான துவக்கம் கொடுத்து வந்த இந்த ஜோடி இந்த போட்டியில் 26 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் கில் 9 ரன்களில் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமலும் ஸ்ரேயாஸ் ஐயர் நான்கு ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் இந்தியா 40 ரன்கள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

- Advertisement -

இந்நிலையில் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் கேப்டன் ரோஹித் சர்மா உடன் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தார். இவர்கள் இருவரும் நான்காவது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த நிலையில் 39 ரன்கள் எடுத்திருந்த கேஎல் ராகுல் அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து சூரியக்குமார் ரோஹித் சர்மா உடன் இணைந்தார். அரை சதம் எடுத்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கேப்டன் ரோஹித் சர்மா 101 பந்துகளில் பத்து பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்சர் உடன் 87 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இவரைத் தொடர்ந்து களம் இறங்கிய ரவீந்திர ஜடேஜா எட்டு ரன்னிலும் முகமது சமி ஒரு ரன்னிலும் அவுட் ஆகினர். இதனால் இந்தியா 200 ரன்களை தாண்டுமா என்ற சந்தேகம் நிலவியது. எனினும் சூரியகுமார் யாதவின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 200 ரன்களை கடந்தது. அவர் 47 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 49 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். எனினும் ஒன்பதாவது விக்கெட்டுக்கு குல்தீப யாதவ் மற்றும் பும்ரா இருவரும் இணைந்து 21 ரன்கள் சேர்க்க 50 ஓவர்களில் 229 ரன்களுக்கு ஒன்பது விக்கெட்டுகள் இழந்திருந்தது இந்தியா.

இதனைத் தொடர்ந்து 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி. அந்த அணியின் துவக்க வீரர்கள் அதிரடியாக தொடங்கினாலும் இந்தியாவின் வேகப்பந்து வீச்சு கூட்டணி இங்கிலாந்து அணியை தடம் புரளச் செய்தது. ஜஸ்பிரீத் பும்ரா அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்த 30 ரன்கள் விக்கெட் இல்லாமல் இருந்த இங்கிலாந்து 33 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்தது. இதனைத் தொடர்ந்து பந்து வீச வந்த முகமது சமி அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமான பென் ஸ்டோக்ஸ் டிக்கெட்டை வீழ்த்த 39 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் இழந்திருந்தது. தனது அடுத்த ஓவரின் முதல் பந்தில் பேர்ஸ்டோ விக்கெட்டையும் வீழ்த்தி மீண்டும் இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்தியாவின் இந்த ஆரம்பகட்ட தாக்குதலில் இருந்து இங்கிலாந்து அணியால் மீளவே முடியவில்லை.

- Advertisement -

அந்த அணியின் வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். கேப்டன் ஜோஸ் பட்லர் 10 ரன்களும் மொயின அலி 15 ரன்னிலும் லியான் லிவிங்ஸ்டண் 27 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இவர்களைத் தொடர்ந்து கிரிஸ் ஒக்ஸ் 10 ரன்னும் ஆதில் ரசீது 13 ரன் மற்றும் மார்க் வுட் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தனர். இறுதியாக டேவிட் வில்லி 16 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 34.5 ஓவர்களில் 129 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் பந்துவீச்சில் பும்ரா 3 விக்கெட்டுகளும் முகமது சமி 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கட்டும் வீழ்த்தினர். .

இதனால் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி 12 புள்ளிகள் உடன் மீண்டும் முதலிடத்திற்கு சென்று இருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் அரை இறுதியில்‌ ஒரு கால் வைத்து விட்டது என்றே கூறலாம். மறுபுறம் இங்கிலாந்த அணி உலக கோப்பையில் இருந்து வெளியேறுவதற்கான எல்லையில் இருக்கிறது. நடப்புச் சாம்பியன் பிள்ளைகள் பட்டியலில் இறுதி இடத்தில் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது .

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles