நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடு இருக்கும் 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் பாயிண்ட்ஸ் டேபிள் முதலிடத்தில் இருப்பதோடு இந்த உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து 243 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
பேட்டிங் பந்துவீச்சு ஃபீல்டிங் என கிரிக்கெட்டின் சகல துறைகளிலும் இந்திய அணி இந்த வருட உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு உள்ளது. இதே பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடையே மிகப்பெரிய போராட்டம் பெற்றிருக்கிறது. இந்திய அணியை இந்த உலகக் கோப்பையில் வீழ்த்துவது என்பது முடியாத ஒரு காரியம் என முன்னாள் வீரர்கள் கனிக்கும் அளவிற்கு இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் நேற்றைய போட்டி குறித்து பாகிஸ்தான் தொலைக்காட்சி ஏ ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசிய வாசிம் அக்ரம் தற்போது இந்தியா இருக்கும் பார்மில் அவர்களை இந்த ஒரு அணியால் மட்டும்தான் வீழ்த்த முடியும் என மிகப்பெரிய பாராட்டை இந்திய அணிக்கு தெரிவித்திருக்கிறார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வரும் நாளில் இருந்தே பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தை பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் ஒரு சில முன்னால் வீரர்கள் சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தை பற்றி தனது பாராட்டுகளை தெரிவித்த வாசிம் அக்ரம் ரெஸ்ட் ஆப் த வேர்ல்ட் அணியால் மட்டுமே தற்போது இந்திய அணியை வீழ்த்த முடியும் என தெரிவித்திருக்கிறார். அதாவது உலகில் இருக்கும் அனைத்து நாட்டு வீரர்களையும் ஒன்றாக இணைத்து ரெஸ்ட் ஆப் த வேர்ல்ட் அணி இந்தியாவிற்கு எதிராக விளையாடினால் மட்டுமே தற்போது இருக்கும் ஃபார்மில் இந்திய அணியை வீழ்த்துவது சாத்தியமாக இருக்கும் என்றும் அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து தொடர்ந்து பேசிய அவர் “இந்திய அணி பேட்டிங் பௌலிங் மற்றும் ஃபீல்டிங் என கிரிக்கெட்டின் அனைத்து துறைகளிலும் இந்த உலக கோப்பையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அவர்கள் முதலில் பேட்டிங் செய்தாலும் போட்டியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். முதலில் பந்து வீசினாலும் போட்டி அவர்களது கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும் போட்டி தங்களது கைகளில் இருந்து நழுவி செல்லாமல் ஆதிக்கம் செலுத்தி விளையாடுகின்றனர் . அதனால் இந்திய அணியை வீழ்த்த வேண்டும் என்றால் உலகின் மற்ற அணிகளில் இருக்கும் சிறந்த வீரர்களை கொண்டு உருவாக்கப்படும் ரெஸ்ட் ஆப் த வேர்ல்ட் அனிமல் மட்டும் தான் சாத்தியம்” என்று தெரிவித்திருக்கிறார்.
விராட் கோலியின் 49 ஆவது சதத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த அக்ரம் ” விராட் கோலிக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாம் அவரை மாடர்ன் டே கிரேட் என்று ஏன் அழைக்கிறோம் என ஒவ்வொரு முறையும் தனது ஆட்டத்தின் மூலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அனைத்து வீரர்களையும் விட அவர்தான் முன்னிலையில் உள்ளார். நேற்றைய போட்டியின் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சவாலான ஒன்றாக இருந்தது. ரோகித் சர்மா துவக்கத்தில் அதிரடியாக ஆடியது பின்வரும் வீரர்களின் மீதான அழுத்தத்தை குறைத்தது. தென்னாப்பிரிக்கா தங்களது இரண்டாவது விக்கெட்டை இழந்த போது போட்டி முற்றிலுமாக இந்தியாவின் வசம் வந்து விட்டது” என தெரிவித்திருக்கிறார் வாசிம் அக்ரம்.
இந்திய அணி வருகின்ற நவம்பர் 11ஆம் தேதி நெதர்லாந்து அணிக்கு எதிராக பெங்களூருவில் வைத்து தங்களது கடைசி லீக் போட்டியில் விளையாட இருக்கிறது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 15 ஆம் தேதி மும்பையில் நடைபெற இருக்கும் முதல் அரை இறுதிப் போட்டியில் புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் அணியுடன் மோத இருக்கிறது. இந்த நான்காவது இடத்திற்காக நியூசிலாந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் போராடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

