2023 ஆம் ஆண்டின் நடப்பு உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது. லீக் போட்டிகள் மற்றும் அரை இறுதி போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் வருகின்ற 19ஆம் தேதி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட இருக்கின்றன. இந்தப் போட்டி அகமதாபாத்தில் வைத்து நடைபெற உள்ளது.
முன்னதாக நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா சவுத் ஆப்பிரிக்கா அணியை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது . இந்தப் போட்டியில் முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது . அந்த அணியின் டேவிட் மில்லர் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.
213 ரன்கள் என்ற இலக்கை நோக்கி அதிரடியாக தொடங்கிய ஆஸ்திரேலியா ஒரு கட்டத்தில் 7 விக்கெட் இழந்து தடுமாறியது. எனினும் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் இருவரும் பொறுப்புடன் ஆடி ஆஸ்திரேலியா வெற்றி பெற உதவினர். இந்தப் போட்டியில் 62 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்களும் கைப்பற்றிய ஹெட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் இறுதிப் போட்டி ஒருதலை பட்சமாக தான் இருக்கும் என குழப்பமான கருத்தை தெரிவித்து இருக்கிறார். தங்கள் அணியின் வெற்றி குறித்து புகழ்ந்து பேசிய அவர் இந்திய அணியுடன் இறுதிப்போட்டியில் விளையாடுவது சுவாரசியமான ஒன்று எனவும் தெரிவித்தார். மேலும் இறுதிப்போட்டியில் விளையாடுவதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார் .
இது தொடர்பாக பேசிய தம்மின்ஸ் ” முதலில் நாங்கள் பந்து வீசியது ஏமாற்றம் அளிக்கவில்லை. மிச்சல் ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட் இருவரும் எங்களுக்கு தொடக்க நேரங்களில் சிறப்பான பந்துவீச்சை அமைத்துக் கொடுத்தனர். வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் ஆரம்ப ஓவர்களில் பந்து நன்றாக ஸ்விங் ஆனது. டிரெஸ்ஸிங் ரூமில் இருப்பதைவிட டேட்டிங் செய்ய களத்தில் இருப்பது எளிதாக இருந்தது. ஏனெனில் ட்ரெஸ்ஸிங் குரூப்பில் இருக்கும் போது அடுத்து என்ன நடக்க இருக்கிறது என்ற பதற்றம் இருந்து கொண்டே இருந்தது. எனினும் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
எங்கள் அணியின் பீல்டிங் இந்த உலகக்கோப்பை எண் தொடக்கத்தில் சிறப்பாக இல்லை. ஆனால் நேற்றைய போட்டியில் மிகவும் அருமையாக இருந்தது. 37 வயதான டேவிட் வார்னர் ஆடுகளத்தில் பரபரப்புடன் செயல்படுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. ட்ராவஸ் ஹெட் எங்களுக்கு பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலுமே சிறப்பான பங்களிப்பை வழங்கினார் . விக்கெட் கீப்பர் இங்கிலீஷ் மிடில் ஓவர்களில் கட்டுப்பாடுடன் ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டுகள் விழாத வண்ணம் பார்த்துக் கொண்டார். இதற்கு முன்பு உலகக்கோப்பை இறுதிப் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் இருக்கிறார்கள். சில வீரர்கள் டி20 இறுதிப் போட்டியிலும் விளையாடி இருக்கின்றனர். அவர்களது அனுபவம் அணிக்கு சிறப்பான வகையில் உதவும் .
2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வெற்றி என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மகத்தான ஒன்று. இறுதிப் போட்டியில் உலகின் மிகப்பெரிய ஸ்டேடியத்தில் ஆடுவது சுவாரசியமாக இருக்கும். எனினும் ரசிகர்கள் ஒன் சைடு ஆக தான் இருக்கப் போகிறார்கள். எங்களுக்கு எப்போதும் போல ஆதரவு குறைவாக தான் இருக்கும். இந்தியாவில் மீண்டும் ஒரு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவது மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கப் போகிறது என தெரிவித்தார்.

