RCB மேட்ச்.. தோனி உடைச்சத நீங்க பாத்தீங்களா.. குப்ப மாதிரி பேசக்கூடாது.. உண்மையா நடந்தது இதுதான் – ஹர்பஜனுக்கு சிஎஸ்கே பிசியோ பதிலடி

கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. மேலும் 2023 ஆம் வருட ஐபிஎல் சாம்பியன் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்களுக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் தோல்வியால் விரக்தி அடைந்த எம்.எஸ் தோனி வீரர்களின் டிரெஸ்ஸிங் அறைக்கு அருகில் இருந்த ஸ்கிரீனை உடைத்ததாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் பதட்டமான சூழ்நிலையிலும் அமைதியாக இருப்பதால் மிஸ்டர் கூல் என பெயர் எடுத்த எம்.எஸ் தோனி உணர்ச்சி வசப்பட்டு ஸ்கிரீனை உடைத்ததாக ஹர்பஜன்சிங் பேசி இருப்பதற்கு சிஎஸ்கே அணியின் பிசியோ மறுப்பு தெரிவித்திருக்கிறார். ஹர்பஜன் சிங் கருத்திற்கு அவர் சமூக வலைதளத்தின் மூலமாக பதிலளித்திருக்கிறார். ஐபிஎல் அணிகள் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்களின் பட்டியலை வெளியிட இருக்கும் நேரத்தில் இந்த நிகழ்வு வைரலாகி வருகிறது.

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி ஐபிஎல் போட்டி தொடர்களில் மட்டும் விளையாடி வந்தார். 2023 வருடம் ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்று கொடுத்த தோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2024 ஆம் வருட ஐபிஎல் தொடரிலும் விளையாடினார். மேலும் இந்தத் தொடரில் கேப்டன் பதவியை கெயிக்வாட்டிற்கு அளித்த தோனி வீரராக மட்டுமே விளையாடினார். இந்தத் தொடரின் ஆரம்பத்தில் சிஎஸ்கே அணி சிறப்பாக செயல்பட்டாலும் இரண்டாவது சுற்று லீக் போட்டிகளில் தடுமாறியது. இதனால் ஆர்சிபி அணியுடன் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே அணி இருந்தது.

- Advertisement -

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆர்சிபி 218 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து ஆடிய சிஎஸ்கே அணி 202 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தாலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு இருந்தது. இந்நிலையில் இறுதி ஓவரில் பிளே ஆப்க்கு தகுதி பெற 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரின் முதல் பந்தை சிக்ஸர் அடித்த தோனி அடுத்த பந்தில் ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து சிஎஸ்கே 20 ஓவர்களில் 191 ரன்கள் மட்டும் எடுத்து ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது.

இந்நிலையில் சமீபத்தில் ஸ்போர்ட்ஸ் யாரி என்ற நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்த ஹர்பஜன் சிங், தோனி கோபத்தில் ட்ரெஸ்ஸிங் ரூம் அருகே இருந்த ஸ்கிரீனை உடைத்ததாக தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பேசிய அவர் பெங்களூர் அணியின் வீரர்கள் தங்களது வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் முக்கியமான ஆட்டத்தில் வெற்றி பெற்றார்கள். அதனால் தங்களது வெற்றியை சிறப்பாக கொண்டாடினார்கள். மகேந்திர சிங் தோனி மற்றும் சிஎஸ்கே வீரர்கள் ஆர்சிபி அணியுடன் கைகுலுக்க மைதானத்தில் காத்திருந்தனர் என தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ஆர்சிபி வீரர்கள் கை கொடுக்க வந்த போது எரிச்சலடைந்த தோனி வேகமாக டிரெஸ்ஸிங் ரூம் நோக்கி சென்றார். மேலும் தோல்வியின் விரக்தியில் இருந்த அவர் ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு வெளியே இருந்த ஸ்கிரீனை தனது கைகளால் குத்தி உடைத்தார். இதனை வர்ணனை அறைக்கு அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். ஆட்டத்தின் போது ஒவ்வொரு வீரருக்கும் இது போன்ற உணர்வுகள் ஏற்படுவது சகஜம் தான் என ஹர்பஜன் சிங் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான பதிவு சமூக வலைதளத்தில் வைரலானது. இந்தப் பதிவிற்கு சிஎஸ்கே அணியின் பிசியோதெரபிஸ்ட் டாமி சிம்செக் பதிலடி கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக தனது கருத்தை பதிவிட்டு இருக்கும் அவர் ஹர்பஜன் சிங் கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. தோனி எதையும் உடைக்கவில்லை. மேலும் சிஎஸ்கே அணியில் பணியாற்றிய இவ்வளவு காலங்களில் ஒருமுறை கூட தோனி கோபப்பட்டு நான் பார்த்ததில்லை என தெரிவித்திருக்கிறார் .

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles