ஐபிஎல் 2025.. சென்னை சூப்பர் கிங்ஸ் தக்க வைக்க போகும் நான்கு வீரர்கள்.. ஒரே ஒரு வெளிநாட்டு வீரருக்கு மட்டுமே இடம்.. முழு விபரம்

17வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் மே 26ம் தேதியோடு முடிவு பெற்றது. இதன் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட்டின் முன்னணி அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமலேயே வெளியேறின. அதிலும் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் நான்கு வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் முடித்தது.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னணி வீரர்களின் காயம் காரணமாக இந்தத் தொடரில் 7 வெற்றிகளை பெற்று 7 போட்டிகளில் தோல்வி அடைந்து ஐந்தாவது இடத்தில் முடித்தது. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர்காக மெகா ஆக்சன் நடைபெற உள்ளதால் சென்னை அணி முக்கியமாக இந்த நான்கு வீரர்களை மட்டும் தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகேந்திர சிங் தோனி ஒருவேளை தனது ஓய்வினை அறிவிக்கும் பட்சத்தில் இந்த நான்கு வீரர்களும் முக்கியமாக இடம் பெறலாம்.

- Advertisement -

1.ருத்ராஜ் கெய்க்வாட்

சிஎஸ்கேவுக்காக தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி விளையாடி வரும் ருத்ராஜ் கெய்க்வாட் இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் சிறப்பாகவே செயல்பட்டார். மேலும் இந்த ஆண்டு அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில், விராட் கோலிக்கு அடுத்தபடியாக 581 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்தில் முடித்தார். விராட் கோலி 741 ரன்கள் உடன் முதலிடத்தில் ஆரஞ்சு தொப்பியை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

2.ரவீந்திர ஜடேஜா

உலகின் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக தக்கவைக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு பேட்டிங்கில் சிறப்பாக செயல்படாவிட்டாலும், பந்துவீச்சில் சிறப்பாகவே செயல்பட்டார். இந்தாண்டு ஐபிஎல் தொடரில் எட்டு விக்கெட்டுகள் வீழ்த்தி முக்கியமான நேரத்தில் அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார். மகேந்திர சிங் தோனி விளையாடாத பட்சத்தில் இவரை தக்க வைக்கவே அதிக வாய்ப்பு உள்ளது.

3.மதீஷா பத்திரானா

இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளரான மதிஷா பத்திராணா 2022ஆம் ஆண்டு சென்னை அணிக்காக ஒரு சில போட்டிகளில் விளையாடினார். இவரது பந்துவீச்சு தோனிக்கு மிகவும் பிடித்துப் போக கடந்த இரண்டு சீசன்களிலும் சென்னை அணிக்காக சிறப்பாக விளையாடி பல வெற்றிகளை தேடி கொடுத்துள்ளார். இந்த ஆண்டு காயம் காரணமாக இவர் தொடரின் பாதிலேயே வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதால் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போய்விட்டது. இதனால் இவரும் சென்னை அணியில் தக்க வைக்கப்படலாம்.

இதையும் படிங்க:அந்த 2 நாள்.. வெறும் 2 நாள்.. அது மட்டும் தாண்டிட்டா உலகக்கோப்பை நமக்குத் தான்.. முகமது கைஃப் பேட்டி

4.சிவம் துபே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிடில் ஓவர்களில் களமிறங்கி சுழற் பந்துவீச்சை பதம் பார்க்கும் ஆல் ரவுண்டர் சிவம் துபே அடுத்த ஆண்டு சென்னை அணியில் தக்க வைக்க அதிக வாய்ப்பு உள்ளது. பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்காக விளையாடிய இவர் சென்னை அணியில் 2022ஆம் ஆண்டு இடம் பிடித்த இவர் மிடில் ஆர்டரில் தனது அபார பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். இந்த ஆண்டு இவர் சிறப்பாக விளையாடியதன் காரணமாக டி20 உலக கோப்பைக்கு இவரது பெயர் இடம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles