ஒன்பதாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
இதன் அடுத்த சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், குறிப்பிட்ட வீரர் ஒருவருக்கு பந்து வீசுவது மிகவும் கடினம் என்றும், அந்த ஒரு பேட்ஸ்மேன் உங்களை எப்போதும் அழுத்தத்திலேயே வைத்திருப்பார் என்றும் ஆப்கானிஸ்தான் அணி கேப்டனான ரஷீத் கான் கூறியிருக்கிறார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்த உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு தற்போது அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. ஏற்கனவே நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் முன்னணி அணிகளை வீழ்த்தி வெற்றி கண்ட வளர்ந்து வரும் அணியான ஆப்கானிஸ்தான் தற்போதைய டி20 தொடரிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.
சிறப்பான பங்களிப்பை அளிக்கும் பேட்ஸ்மேன்கள் மற்றும் உலகத்தரமான சுழற் பந்துவீச்சு, என்ற ஆப்கானிஸ்தான் பலத்திற்கு முக்கிய காரணங்களாக விளங்குகிறது. மேலும் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்து வீசும் கவனத்தைப் பெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் அணியின் கேப்டன் ரஷீத் கான் மற்றும் பயிற்சியாளர் டிராட் ஆகியோரும் அணியின் முன்னேற்றத்துக்கு பெரிதாக உதவுகிறார்கள்.
இந்த நிலையில் சூப்பர் 8 சுற்றின் ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் போட்டியாக இந்திய அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த நிலையில் இரண்டு அணி வீரர்களும் தற்போது மிகத் தீவிரமான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். பயிற்சி மேற்கொண்டிருந்த போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரஷித் கான் இந்திய ஜாம்பவான் ஆன விராட் கோலிக்கு பந்து வீசுவது மிகவும் கடினம் என்றும், அவர் எப்போதும் பந்துவீச்சாளர்களை அழுத்தத்திலேயே வைத்திருக்க விரும்புவார் என்றும் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ரஷீத் கான் விரிவாக கூறும் பொழுது
“இந்திய வீரர் விராட் கோலிக்கு பந்து வீசுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். அவர் எப்போதும் சரியான இடத்தை கண்டுபிடித்து ரன்கள் அடிப்பதுடன் பந்துவீச்சாளர்களை அழுத்தத்திலேயே வைத்திருப்பார். அதனால்தான் விராட் கோலி உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார். அவருக்கு பந்து வீசுவதை எந்த பந்துவீச்சாளரும் விரும்ப மாட்டார்” என்று பேசி இருக்கிறார்.
இதையும் படிங்க:இந்தியாவுக்கு எதிரியே ஐபிஎல்தான்.. இன்னோரு காரணம் இருக்கு இந்தியாவை வீழ்த்த.. கூறுகிறார் டிராட்
ரஷித் கானின் இந்த கருத்து தற்போது கிரிக்கெட் உலகில் கவனத்தைப் பெற்று வருகிறது. மேலும் இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை சந்திக்க உள்ளதால் விராட் கோலி மற்றும் ரஷீத் கானுக்கு இடையேயான மோதல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் போட்டி இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கும், ஆப்கானிஸ்தான் அணியின் உலகத்தரமான சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் இடையேயான போட்டியாக இருக்கும் என்று தினேஷ் கார்த்திக் ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

