ஜூன் 20.. இந்திய கிரிக்கெட்டையே ஆட்டிப் படைத்த 3 ஜாம்பவான்கள்.. ஒரே தினத்தில் அறிமுகம்.. முழு விபரம்

கிரிக்கெட்டின் அடிப்படையான டெஸ்ட் தொடர் இந்திய கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், சேவாக், லட்சுமன், கங்குலி, டிராவிட் போன்ற ஜாம்பவான் வீரர்களால் இந்திய மக்களால் அதிகம் ஈர்க்கப்பட்டது என்று கூறலாம்.

- Advertisement -

அப்படிப்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் மூன்று முக்கிய ஜாம்பவான்கள் ஒரே நாளில் இந்திய டெஸ்ட் தொடருக்கு அறிமுகமாகியுள்ளனர்.

- Advertisement -

என்னதான் ஒரு நாள் மற்றும் டி20 என நவீன கிரிக்கெட்டில் மாற்றங்கள் ஏற்பட்டாலும், டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்களிடைய தனி கவனம் பெரும் என்றால் அது மிகை ஆகாது. டெஸ்ட் கிரிக்கெட் ஒரு பேட்ஸ்மேனின் நுணுக்கத்திற்கும், அதீத பொறுமைக்கும் ஒரு சவால் என்றே கூறலாம். இந்தத் தொடரில் பந்துவீச்சாளர்கள் எந்த இடத்தில் வீச விரும்புகிறார்களோ இஷ்டத்திற்கு தான் விரும்பிய இடத்தில் வீசி தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்துவார்கள்.

- Advertisement -

குறிப்பாக வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்த 400 ரன்கள் எல்லாம் கிரிக்கெட் வரலாற்றிலேயே காலத்திற்கும் நின்று பேசும் சாதனையாகும். அத்தனை பந்துகளையும் எதிர்கொண்டு எந்த ஒரு இடத்திலும் அவசரப்படாமல் பொறுமையாகவும், நிதானமாகவும் விளையாடி இருக்கிறார். அவர் நிஜமாகவே ஒரு ஜாம்பவான் பிளேயர்தான். அதுபோலவே தற்போது இந்திய கிரிக்கெட்டிலும் இந்த மூன்று வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே நாளில் அறிமுகமானவர்கள். அந்த மூன்று வீரர்கள் குறித்து காண்போம்.

1.சவுரவ் கங்குலி

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற டாடா என்று அழைக்கப்படும் சவுரவ் கங்குலி 1996 ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் நாள் இதே தேதியில் டெஸ்ட் கிரிக்கெட்டுகாக அறிமுகமாக இருக்கிறார். 113 போட்டிகள் விளையாடி இருக்கும் கங்குலி 7212 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் 16 சதங்களும், 35 அரை சதங்களும் அடங்கும். ஒரு இன்னிங்ஸில் இவர் குவித்த 239 ரன்கள் இவரது அதிகபட்ச ரன்கள் ஆகும்.

2.ராகுல் டிராவிட்

தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட் 1996 ஆம் ஆண்டு இதே நாளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகிறார். இந்திய அணியின் தடுப்புச் சுவர் என்று அழைக்கப்படும் டிராவிட் இக்கட்டான சூழ்நிலைகளில் இவரது தடுப்பாட்டத்தின் மூலம், தோல்வியிலிருந்து இந்தியாவை பல போட்டிகளில் காப்பாற்றி இருக்கிறார். 164 போட்டிகள் விளையாடி இருக்கும் ராகுல் டிராவிட் இதுவரை 13,288 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் 36 சதங்களும், 63 அரைசதங்களும் அடங்கும்.

இதையும் படிங்க:சச்சின் டிராவிட்டின் முன்னாள் சக வீரர் தற்கொலை.. இரங்கல் தெரிவித்த பிசிசிஐ செயலாளர்.. சோகத்தில் ரசிகர்கள்

3.விராட் கோலி

தற்போது நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக வளம் வந்து கொண்டிருக்கும் விராட் கோலி 2011ஆம் ஆண்டு இதே நாளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகிறார். விராட் கோலி இதுவரை 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8848 ரன்கள் குவித்திருக்கிறார். இதுவரை விராட் கோலி 29 சதங்களும், 30 அரை சதங்களும் குவித்திருக்கிறார். விராட் கோலி இன்னமும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருப்பதால் இன்னமும் பல சாதனைகள் படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles