சிராஜை அந்த அர்த்தமே இல்லாத வேலையை செய்யவா நியூசிலாந்து கூட்டிட்டு போனீங்க.. கம்பீரை சாடிய இந்திய முன்னாள் வீரர்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் விளையாடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்படுவது கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சிராஜ் சேர்க்கப்படாதது குறித்து முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இதுவரை ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் மட்டுமே சிராஜ் விளையாடியுள்ளார். வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக பணிச்சுமை இருந்ததாகவும், அடுத்த போட்டியில் பந்துவீச்சு மாற்றங்கள் இருக்குமா என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

- Advertisement -

இது குறித்து ஆகாஷ் சோப்ரா,
சிராஜ் நிச்சயமாக விளையாட வேண்டும் என்றும், அவரை அணியில் களமிறக்க இந்தியா தயங்குவது குழப்பமாக இருப்பதாகவும் தெரிவித்தார். முதல் டெஸ்டிலேயே அவர் விளையாடியிருக்க வேண்டும் என்றும், அப்படி விளையாட வைக்கப் போவதில்லை என்றால் அவரை எதற்காக நியூசிலாந்து அழைத்துச் சென்றீர்கள் என்றும், ஒரு அர்த்தமில்லாத ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காகவா என்றும் இந்திய அணி நிர்வாகத்தைக் கேள்வி எழுப்பியுள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles