பும்ரா எல்லாம் அந்த பையனுக்கு சும்மா.. சூரியவன்சி தான் கிரிக்கெட் உலகை இனி ஆளப் போகிறான் – ஹர்பஜன் சிங் பாராட்டு

நேற்று 15 வயதான வைபவ் சூரியவன்சி உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் ஒரே ஓவரில் இரண்டு சிக்சர் அடித்தார். இது குறித்து இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -

உலகின் சிறந்த பேட்ஸ்மேன்கள் கூட பும்ரா பந்துவீச்சில் பெரிய அளவுக்கு அதிரடியாக ஆடியதில்லை. ஆனால் இளம் சிறுவன் அதிரடியாக ஆடியது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

- Advertisement -

இது குறித்து ஹர்பஜன் சிங் பேசும்போது ” உலகின் மிகச்சிறந்த பவுலரை ஒரு 15 வயது சிறுவன் அடித்தான். உலகில் சிறந்த பேட்ஸ்மேன்கள் கூட அவரை எதிர்த்து விளையாடுவதற்கு பதட்டப்படுவார்கள். ஆனால் இந்த சிறுவன் நேராக ஒரு சிக்ஸர் அடித்தான். உடனே அவர் சுதாரித்து மெதுவாக ஒரு பந்தை வீச அதையும் சிக்ஸர் அடித்தான்”

- Advertisement -

“பும்ரா திரும்பி வந்து விடுவார். ஆனால் இந்த பையன் தான் உலகை ஆள வந்திருப்பதாக சொல்லி இருக்கிறான். நிச்சயம் இந்த பையன் உலகை ஆளுவான்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles