நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணி குஜராத் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த சூழ்நிலையில் அவரது பேட்டிங் குறித்து இந்திய முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.
நேற்றைய போட்டியை பொருத்தவரை முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் சிறப்பாக விளையாடி 97 ரன்கள் குவித்தார். கடைசி ஓவரில் சதம் அடிக்க வாய்ப்பு இருந்தும், அதனை அவர் பயன்படுத்திக் கொள்ளாத நிலையில் மற்றொரு சக வீரர் சஷாங்க் சிங் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்ததால் தன்னுடைய சதத்தைப் பற்றி கவலைப்படாமல் அதிரடியாக விளையாடுமாறு கூறினார்.
கடைசி ஓவரில் மட்டும் பஞ்சாப் அணிக்கு 25 ரன்கள் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிரடியாக விளையாடிய சஷான்க், 16 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார். இதனால் குஜராத் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்துவதற்கு போதுமானதாக அமைந்தது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பாதி ராயுடு இது குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார். இவர் சென்னை மற்றும் மும்பை அணிகளில் விளையாடி சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “குறிப்பாக ஒரு சதத்தை தியாகம் செய்துள்ள விஷயம் மும்பை பேட்ஸ்மேன் இடம் இருந்து வருகிறது. ஏன் நான் இதை கூறுகிறேன் என்றால், மும்பையில் நீங்கள் ஒரு கிரிக்கெட் வீரராக ஒரு பேட்ஸ்மேனாக வளரும் போது சதம் அடிப்பது குறித்து மட்டுமே எப்போதும் விவாதிக்கப்படும். ஸ்ரேயாஸ் ஐயர் மும்பை வீரர் என்பதால் அவர் தனது சதத்தைப் பற்றி கவலைப்படாமல் விளையாடியிருக்கிறார்.
இதையும் படிங்க:97 ரன்.. ஸ்ரேயாஸ் ஐயர் செய்த தியாகம்.. விராட் கோலியை விமர்சித்தாரா ரவி சாஸ்திரி.? சமூக வலைதளங்களில் பரவும் தகவல்
குறிப்பாக இது ஒரு முக்கியமான மாற்றம் நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு புத்திசாலித்தனமாக இருக்கப் போகிறது” என்று பேசி இருக்கிறார். மேலும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு என்று ரசிகர் பட்டாளம் தற்போது உருவாக ஆரம்பித்திருக்கிறார்கள். மேலும் இந்த ஆண்டு கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் பஞ்சாப் அணியும் போட்டி போடும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

