நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்தும் ஸ்ரேயாஸ் ஐயர் அணியின் நலனுக்காக அதை மறுத்து சக வீரரை ரன்கள் அடிக்க கூறியிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் இது குறித்து இந்திய முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி சில முக்கிய விஷயங்கள் கூறியிருக்கிறார்.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது. அப்போது ஸ்டேயஸ் அய்யர் 90களில் விளையாடிக் கொண்டிருந்தபோது அவர் சதம் அடிக்க கடைசி இரண்டு ஓவர்கள் நல்ல வாய்ப்பாக பார்க்கப்பட்டது. ஆனால் மறுமுனையில் சசாங்க் சிங் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த காரணத்தால் பஞ்சாப் அணியின் ரன்கள் மிக வேகமாக உயர்ந்து கொண்டிருந்தது.
இந்த சூழ்நிலையில், சதம் அடிக்கும் தனது வாய்ப்பை பெரிதாக கவலைப்படாமல் அணியின் நலன் கருதி கடைசி ஓவரை தொடர்ந்து விளையாடுமாறு அவரை ஸ்ரேயாஸ் ஐயர் வலியுறுத்தினார். இந்த சூழ்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு கேகேஆர் அணிக்கு எதிராக பெங்களூர் அணி விளையாடிக் கொண்டிருந்த போது, ஸ்டாய்னிஸ் இரண்டாவது ரன் எடுக்க விராட் கோலியை வலியுறுத்த, ஆனால் விராட் கோலி சதம் அடிக்க நினைத்து அந்த வாய்ப்பை நிரகரித்தார்.
இந்த வீடியோ நேற்று முதல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த சூழ்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடிக்காதது குறித்து ரவி சாஸ்திரியிடம் பேசிய சஷாங்க் சிங், அணியின் நலன் கருதி, ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து தன்னை விளையாடுமாறு அறிவுறுத்தியதாக அவர் கூறியிருக்கிறார். இந்த சூழ்நிலையில் ரவி சாஸ்திரி பேசிய கருத்து விராட் கோலி செய்ததோடு ஒப்பிட்டு பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:வேண்டுமென்றே தான் ஸ்ரேயாஸ் ஐயரை நான் சதம் அடிக்க விடவில்லை.. அதற்குப் பின்னால் முக்கியக் காரணம் உள்ளது – ஷசாங் சிங்
அதாவது ஸ்ரேயாஸ் ஐயரின் செயல் குறித்து பேசிய ரவி சாஸ்திரி “ஒரு குழு விளையாட்டில் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும். இது அவர் எடுத்து சரியான முடிவு” என்று பாராட்டினார். ஸ்ரேயாஸ் ஐயரை ரவி சாஸ்திரி பாராட்டிய நிலையில் விராட் கோலியை அவர் விமர்சிக்கிறார் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தற்போது செய்திகளை பரப்பி வருகின்றனர்.

