பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளிடயே நேற்று நடந்த போட்டி மற்றுமொரு ரன்கள் மழையாக அமைந்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 243/5 என்ற பிரம்மாண்ட ஸ்கோரை எட்டியது. அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ஆடி 97* ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் ஷசாங் சிங் ஸ்டிரைக்கை அவரே வைத்திருந்ததால், ஐயர் சதம் அடிக்கும் பொன்னான வாய்ப்பு பறிபோனது. இது ஐயர் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது.
ஆனால் உண்மையில், சதத்தை ஷ்ரேயாஸ் ஐயர் தான் வேண்டுமென்றே தவறவிட்டுள்ளார் என அவரது சக வீரர் ஷசாங் சிங் தெரிவித்துள்ளார். கடைசி ஓவர் தொடங்குவதற்கு முன்பே, சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஷசாங்கிடம், சதத்தைப் பற்றி யோசிக்காமல் தொடர்ந்து பவுண்டரி அடிக்க அறிவுறுத்தியுள்ளார் கேப்டன் ஐயர். அதனால் தான் ஷசாங் சிங்கும் ஸ்ட்ரைக்கை ஐயருக்கு தராமல் அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்து செலுத்தினார்.
வெறும் 16 பந்தில் 44 ரன்கள் குவித்த ஷசாங் சிங் இன்னிங்ஸ் முடிந்த பின்னர் பேசியதாவது, ” நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியல் மகிழ்ச்சி. கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் அற்புதமான ஆட்டம், எனக்கு இன்னும் பெரிய ஊக்கமாக இருந்தது. நான் களமிறங்கிய உடனே ஐயர் என்னிடம் வந்து, அவருடைய சதத்தைப் பற்றிக் கவலைப்படாமல், முதல் பந்தில் இருந்தில் விளாசச் சொன்னார். நானும் அதேப் போல என்னால் முடிந்த ஷாட்கள் மூலம் பவுண்டரிகளை விளாசி அணிக்கு உதவினேன். ” என்றார்.
கடைசி ஓவரில் ஒரு ரன்னுடன் நிறுத்தி, ஸ்ட்ரைக்கை வசப்படுத்தி முதல் ஐ.பி.எல் சதத்தை ஐயர் நினைத்திருந்தால் அடித்திருக்க முடியும். ஆனால் உண்மையான கேப்டனாக, ஒரு கிரிக்கெட் வீரராக அவர் அணியையே முன்னிலையில் வைத்தா. அவரின் அறிவுறுத்தலின் படி, ஷசாங் கடைசி ஓவரில் 5 பவுண்டரிகளை அடித்தார். மேலும் இந்த கூடுதல் ரன்கள் தான் இறுதியில் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற மிக முக்கியமாக இருந்தது.

