சென்னை டீம் மொக்கையாவே இருந்தாலும் பரவால்ல.. தோனி இருந்தா போதும்.. இது கண்டிப்பா நடக்கும்.. ரகசியத்தை உடைக்கும் மொயின் அலி

17 வது ஐபிஎல் சீசன் வரும் 22ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. அதன் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோத இருக்கும் நிலையில், சென்னை அணியின் ஆல் ரவுண்டர் மொயின் அலி அணியின் கேப்டன் எம்எஸ் தோனி குறித்து இனிமையான விஷயங்களைப் பகிர்ந்து உள்ளார்.

- Advertisement -

நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக தனது நீண்ட தலை முடி ஹேர் ஸ்டைலுடன் சென்னை அணியில் இணைந்திருக்கிறார் தோனி.

- Advertisement -

எனவே தனது கிரிக்கெட் வாழ்க்கையினை எந்த லுக்கில் ஆரம்பித்தாரோ அதே லுக்கடன் முடிக்கப் போவதாக இணையத்தில் செய்திகள் வைரலாகி பரவி வருகின்றன. மகேந்திர சிங் தோனியும் தனது இறுதிப் போட்டி நிச்சயம் சென்னை மைதானத்தில்தான் நடக்கும் என்று கூறியிருக்கிறார். இருப்பினும் அவரது உடல் நிலையை பொருத்தவரை இன்னும் இரு ஐபிஎல் சீசன்களில் விளையாடுவார் என்பது போல்தான் தெரிகிறது.

- Advertisement -

இந்நிலையில் சென்னை மற்றும் பெங்களூர் அணி வீரர்கள் முதல் போட்டிக்காக மிகத் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இரு அணிகளின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டுமே சரிசமமான நிலையில் உள்ளது. இதனால் முதல் போட்டியில் யார் வெற்றி பெறுவார்? என்ற ஆவல் இப்பொழுதே ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கியுள்ளது.

பயிற்சியில் ஈடுபட்டு வரும் சென்னை அணியின் ஆல் ரவுண்டர் மொயின் அலி, மகேந்திர சிங் தோனி குறித்து சில சுவாரசியமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டு உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது
“தோனி ஒரு ஸ்பெஷலான பிளேயர் மற்றும் ஸ்பெஷலான கேப்டன் என்பது அனைவருக்குமே தெரியும். நான் அவருடன் மூன்று சீசன்ங்களில் விளையாடி உள்ளேன். அவர் மிகவும் நல்லவர்.

- Advertisement -

அவரின் புதிய ரோல் குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை. அவருடைய கள வியூகம் மற்றும் அணியைக் கட்டமைக்கும் திறன் எப்போதுமே நன்றாக இருந்துள்ளது. தோனியின் கீழ் பணியாற்றுவது எப்பொழுதுமே ஒரு மகிழ்ச்சியான அனுபவத்தைக் கொடுக்கும். அவர் அனைத்து வீரர்களுக்கும் சரிசமமான வேலையைப் பிரித்துக் கொடுப்பார். தோனி கேப்டனாக இருக்கும் நிலையில், நீங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் பொழுது, அணி பலவீனமாக இருந்தாலும் சரி அல்லது பலமாக இருந்தாலும் சரி உங்களுக்கு எப்பொழுதுமே ஒரு வெற்றி வாய்ப்பு உண்டு. அந்த அளவிற்கு ஆட்டத்தின் கடைசி நிமிடம் வரை அணியை உயிர்ப்போடு வைத்திருப்பார்” என்று கூறியிருக்கிறார்.

மொயின் அலியின் இந்த கருத்து அவர் தோனியின் மீது வைத்துள்ள மரியாதையையும், அன்பையும் வெளிக்காட்டும் வகையில் உள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே அவர் இன்னும் நீண்ட காலம் ஐபிஎல் தொடரில் விளையாட ஆசைப்படுகிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles