காசை கரி ஆக்காதீங்க.. டிஎன்பிஎல் போன்ற தொடரில் ஆடும் வீரர்களுக்கு.. ஐபிஎல் அணிகள் இதை செய்யக்கூடாது – கவாஸ்கர் சர்ச்சை பேட்டி

தமிழ்நாடு பிரிமியர் லீக் போன்ற மாநிலங்கள் நடத்தும் டி20 லீக் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் முன்னுரிமை வழங்கக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பிரபல வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் தெரிவித்திருக்கிறார். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கப்பட்ட பிறகு இந்திய கிரிக்கெட் அசுர வளர்ச்சியை கண்டிருக்கிறது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் வெற்றியால் இந்தியாவிலுள்ள கிரிக்கெட்டின் மொத்த உள் கட்டமைப்பும் மிகப்பெரிய மாற்றத்தை கண்டுள்ளது.

- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தொடர்ந்து இந்தியாவில் உள்ள மாநில கிரிக்கெட் சங்கங்கள் தங்கள் மாநிலங்களுக்குள் டி20 பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர்களை நடத்துகின்றன. தமிழ்நாடு, சட்டீஸ்கர், கர்நாடகா மற்றும் உத்தர பிரதேசத்தை தொடர்ந்து தற்போது டெல்லி கிரிக்கெட் சங்கமும் டெல்லி பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது. இந்த லீக் போட்டிகள் ஐபிஎல் மாடலில் நடத்தப்படுகின்றன. இந்தத் தொடரில் பங்கேற்கும் வீரர்களும் ஏலத்தில் தேர்வு செய்யப்படுகின்றனர்.

- Advertisement -

மாநிலங்கள் நடத்தும் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளுக்கு பிசிசிஐ அனுமதி வழங்குவது குறித்து தனது கேள்விகளை கவாஸ்கர் முன் வைத்திருந்தார். மேலும் இந்த லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் முதல் தர கிரிக்கெட் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படும் போது அவர்களால் சிறப்பாக செயல்பட முடிவதில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். ஒரு மாநிலத்திற்குள் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கும் தேசிய அளவில் கிரிக்கெட் விளையாடுவதற்கும் இடையேயான தரம் வேறுபடுகிறது என்பதை கவாஸ்கர் விளக்கி கூறியிருந்தார் .

- Advertisement -

இது தொடர்பாக மிட் டே பத்திரிக்கையில் எழுதி இருக்கும் கவாஸ்கர் ” 19 வயதிற்கு உட்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் தடுமாறுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஏனெனில் ஒரு நாட்டின் முதல் தர கிரிக்கெட் போட்டிகளின் தரம் ஜூனியர் கிரிக்கெட்டை விட அதிகமாக இருக்கும். இதனால்தான் அண்டர் 19 வீரர்கள் முதல் தரப் போட்டிகளில் விளையாடும் போது மிகப்பெரிய சவால்களை சந்திக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து தொடர்ந்து பேசிய அவர் ” இதே போல் மாநிலங்கள் நடத்தும் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர்களை ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு பல கோடி ரூபாய் செலவழித்து வாங்குகிறார்கள். மாநிலங்கள் நடத்தும் டி20 பிரிமியர் லீக் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர்களால் செய்யத் அலி முஸ்தாக் கோப்பை மற்றும் ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. ஏனெனில் இவற்றிற்கிடையேயான தரம் மாறுபடுகிறது.

- Advertisement -

இதனால் மாநிலங்களில் நடைபெறும் டி20 பிரிமியர் லீக் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர்களை பல கோடி ரூபாய் கொடுத்து வாங்காதீர்கள். அது காசை கரியாக்குவதற்கு சமம் என கவாஸ்கர் தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் தமிழ்நாடு பிரிமியர் லீக் மற்றும் உத்திர பிரதேச பிரிமியர் லீக் போன்ற போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் பல கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வீரர் சாய் சுதர்சன் தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதை தொடர்ந்து ஐபிஎல் ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை எடுத்தது. மேலும் உத்திர பிரதேச பிரிமியர் லீக் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட சமீர் ரிஸ்வி என்ற இளம் வீரரை சிஎஸ்கே அணி 8 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles