நேற்று டெல்லி அணி ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 75 ரன்னில் சுருண்டு விட்டது. மேலும் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்வி குறித்து டெல்லி கேப்டன் அக்சர் படேல் பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் அந்த அணி பவர் பிளேவில் மட்டும் ஒன்பது ரன்கள் எடுத்து ஆறு விக்கெட்டுகளை இழந்தது. இதற்குப் பிறகு அபிஷேக் போரால் மட்டும் தாக்குப்பிடித்து விளையாடி 33 பந்தில் 30 ரன்கள் எடுத்தார். இல்லையென்றால் அந்த அணி 50 ரன் எடுப்பதற்குள் ஆல் அவுட் ஆகி இருக்கும்.
இதுகுறித்து அக்சர் படேல் பேசும்போது “என்ன நடந்தது என்றே தெரியவில்லை. இதனால்தான் கிரிக்கெட்டில் எப்பொழுதும் விழிப்பாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். பஞ்சாப்புக்கு எதிராக கேட்ச் பிடித்திருந்தாலோ இல்லை குஜராத்துக்கு எதிராக ஒரு ரன் எடுத்திருந்தாலோ நாங்கள் வெற்றி பெற்று நல்ல நிலையில் இருந்திருப்போம்”
“கிரிக்கெட்டை பொருத்தவரையில் அப்படி இருந்திருந்தால் இப்படி இருந்திருந்தால் என்று பேசுவது அர்த்தமற்றது. ஆனால் நாங்கள் அந்த எளிதான போட்டிகளை தோற்று விட்டோம். வென்று இருந்தால் எங்கள் பக்கம் மொமெண்டம் இருந்திருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

