தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில் முதல் அணியாக இந்தியா அரை இறுதி போட்டிகளுக்கு தகுதி பெற்றது. இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளும் அரையிறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கின்றனர். நேற்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி மூன்றாவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான லீப் போட்டியில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்தியா 326 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி 83 ரண்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் காரணமாக இந்தியா 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணிக்கு கடும் சவால் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தென்னாப்பிரிக்கா அணி என்பது ஆல் அவுட் ஆனது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் தென்னாப்பிரிக்கா அணியின் சுழற் பந்து வீச்சு ஆள் கவுண்டர் கேசவ் மகராஜ் இந்திய அணியுடன் தென்னாப்பிரிக்கா அணியின் தோல்வி தங்களுக்கு மகிழ்ச்சியான ஒன்று என தெரிவித்திருக்கிறார். மேலும் இது துன்பத்திலும் ஒரு இன்பமான விஷயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் ” இது எங்களுக்கு ஒரு நல்ல பயிற்சியாக அமைந்திருக்கிறது. நிச்சயமாக அவர்கள் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் வருவார்கள். அப்போது இந்திய அணியை நாங்கள் எதிர்கொள்ளும்போது இந்த போட்டியில் நடந்த தவறுகளை திருத்திக் கொண்டு சிறப்பாக செயல்படுவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது” என தெரிவித்திருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” இந்தப் போட்டிக்கு முன்பு வரை நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தோம். இனி வரும் போட்டிகளிலும் முன்பு விளையாடியது போல சிறப்பாக விளையாட முயற்சிப்போம். இந்தத் தோல்வி எங்களது தவறுகளை திருத்திக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. எனவே இந்திய அணியுடன் தோற்றது மகிழ்ச்சியே. சுழற் பந்துவீச்சுக்கு எதிராக எங்களது ஆட்டத்தை நாங்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.
நாங்கள் நான்கு போட்டிகள் தொடர்ச்சியாக விளையாடினோம். ஒரு போட்டி மட்டும் எங்களுக்கு தோல்வியை கொடுத்திருக்கிறது. இந்திய அணியுடன் தோற்றதற்கு ஏதேனும் காரணங்களை கூறி சமாளிக்க விரும்பவில்லை அதே நேரம் இந்த தோல்வி எங்களை சரி செய்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சியே,அரை இறுதி போட்டிகளுக்கு முன்பாக இது போன்ற ஒரு தோல்வி எங்களுக்கு தேவை” என பேட்டி அளித்திருக்கிறார் மகராஜ்.
தொடர்ந்து பேசிய அவர் ” மீண்டும் அடிப்படையான விஷயங்களை செய்து தவறுகளை திருத்திக் கொண்டு அடுத்த போட்டிக்கு பாசிட்டிவாக தயாராகி வருவோம். அடுத்து தோல்வி வரும் முன்பு நம்முடைய தவறுகளை திருத்திக் கொள்வதே சிறந்ததாக இருக்கும் அதையே நாங்களும் செய்வோம்” எனக் கூறி தனது பேட்டியை முடித்திருக்கிறார் கேசவ் மகராஜ்.

