ஆர்சிபி மைதானத்தில் கேவலமா நடக்குது.. சிஎஸ்கே பி சிசிஐ-டம் புகார்.. பெங்களூரில் நடந்ததை ஏற்க முடியாது

இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி ஆர்சிபி அணிக்கு எதிராக பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் விளையாடிய போது மைதானத்தில் டிஜே தவறான முறையில் நடந்து கொண்டதாக இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் சிஎஸ்கே அணி நிர்வாகம் புகார் செய்துள்ளது.

- Advertisement -

இந்த போட்டியில் சிஎஸ்கே வீரர்கள் ஆட்டம் இழப்பும் பொழுது இட்லி தோசை சட்னி சட்னி என்ற பாடல் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டது. மேலும் சிஎஸ்கே வீரர்கள் ஆட்டம் இழந்து வெளியேறும் போது டிஜே மைக்கில் மிகவும் கேலியான முறையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

இத்துடன் கடந்த ஆண்டு இதேபோல ஜிதேஷ் சர்மா ஆட்டம் இழக்கும் பொழுது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இட்லி தோசை சட்னி சட்னி என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது. உடனே இதில் தலையிட்ட சிஎஸ்கே அணி நிர்வாகம் இப்படி பாடல்கள் டிஜே ஒளிபரப்பு செய்யக்கூடாது எனக் கண்டித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறும்போது ” மைதானத்தில் டிஜே வேலை ரசிகர்களை உற்சாகப்படுத்துவது தானே தவிர, எதிரணி வீரர்கள் மற்றும் ரசிகர்களை காயப்படுத்துவது கிடையாது. இதை ஏற்க முடியாது எனவே இந்திய கிரிக்கெட் வாதியத்திடம் புகார் செய்துள்ளோம்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles