இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை டி20 தொடரில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று அடுத்ததாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது.
வருகிற 20ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற வேண்டுமானால் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் கூறியிருக்கிறார்.
இந்திய அணியை பொறுத்தவரை இந்த உலகக் கோப்பை தொடரை ஒரு தோல்வி கூட அடையாமல் வெற்றிப் பாதையிலேயே தற்போது பயணித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்க ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் பெரிதாக சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தவில்லை. மாறாக அக்சார் பட்டேல் மற்றும் ஜடேஜா போன்ற சுழற்பந்து ஆல்ரவுண்டர்களையே பயன்படுத்தியது.
காரணம் பேட்டிங் ஆழத்தை விரிவு படுத்த இந்திய அணி நிர்வாகம் இந்த முடிவை மேற்கொண்டது. ஆனால் அடுத்த சுற்று நடைபெற இருக்கிற வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்கள் முழுக்க முழுக்க சுழற்சிக்கு சாதகமாக இருப்பதால் இந்திய அணிகள் கட்டாயம் மாற்றங்களை செய்தாக வேண்டும். வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரையோ அல்லது சுழற்பந்து ஆல்ரவுண்டர்களில் ஒருவரையோ நீக்கிவிட்டு பிரதான சுழற் பந்துவீச்சாளர் ஒருவரை உள்ளே களமிறக்க வேண்டும்.
இது குறித்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளரும் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரருமான ஸ்டீபன் பிளம்மிங் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது “இந்திய அணி தற்போது வெற்றிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்க ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் வேகப்பந்துவீச்சாளர்களை பெரிதாக பயன்படுத்தியது.
ஆனால் அடுத்த சுற்று நடைபெற இருக்கிற வெஸ்ட் இண்டீஸ் மைதானம் சுழற்சிக்கு சாதகமானவை. இதனால் இந்தியா ஒரே மாதிரியான வீரர்களை அடுத்த சுற்றுக்கு கொண்டு செல்லாது என்று நினைக்கிறேன். ஜடேஜா மற்றும் சான்ட்னர் ஒரே மாதிரியான பந்துகளை வீசக்கூடியவர்கள். இவர்களைப் போலவே அக்சாரும் செயல்படக்கூடியவர் என்பதால் அதற்கு பதிலாக குல்தீப் யாதவை உள்ளே கொண்டு வரலாம்.
இதையும் படிங்க:சூப்பர் 8க்கு முன்னாடி நாங்க இத பண்ணலனா இந்தியாகிட்ட மாட்டிக்குவோம்.. ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் பேட்டி
இதில் ஜடேஜா ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொண்டு எதிரணிக்கு சிறப்பாக பந்து வீசக்கூடியவர். எனவே இந்திய அணி இவரை சிறப்பாக கையாளும். இடது கை சுழற் பந்துவீச்சாளர்களுக்கு இடது கை பேட்ஸ்மேன்கள் சவால் அளிக்கக் கூடியவர்கள் என்ற கருத்தை நான் ஏற்க மாட்டேன். பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசினால் எந்த பேட்ஸ்மேனும் தடுமாறத்தான் செய்வார்கள். இந்திய அணி இந்தத் தொடரில் இறுதிப்போட்டி வரை செல்லும். அன்றைய நாளில் இந்தியா எவ்வாறு செயல்படுகிறதோ அதை பொறுத்து வெற்றி தோல்வி அமையும்” என்று கூறியிருக்கிறார்.

