இதனாலதான் ருத்ராஜை கேப்டனா ஏத்துக்கிட்ட மக்கள் பாண்டியாவை ஏத்துக்கல.. விளக்கம் கூறும் சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாத்

ஐபிஎல் தொடரை பொருத்தவரை முன்னணி அணிகள் என்று கூறினால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் தான். ஏனெனில் இரண்டு அணிகளும் தலா ஐந்து முறை ஐபிஎல் பட்டங்களை வென்று இந்தியன் பிரீமியர் லீக்கை ஆண்ட அணிகளாக திகழ்கின்றன .

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் பிளேயர் என்றால் அது மகேந்திர சிங் தோனி. அவரது தலைமையில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை ஐபிஎல் பட்டங்களை வென்றது. அதேபோல மும்பை இந்தியன்ஸ் அணியில் நட்சத்திர வீரர்கள் என்றால் சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு ரோகித் சர்மாதான்.

- Advertisement -

இப்படிப்பட்ட சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் என்ன நடந்ததோ என்று தெரியவில்லை ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து தடாலடியாக தூக்கினார்கள். தூக்கினாலும் பரவாயில்லை அந்த அணி வீரர்களில் யாராவது ஒருவரை தேர்வு செய்து கேப்டனாக நியமித்திருந்தால் கூட பிரச்சனை பெரிதாக இருக்காது. ஆனால் மும்பை அணியில் இருந்து விலகிய ஹர்திக் பாண்டியாவை குஜராத் அணியில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்று கொடுத்ததன் காரணமாக அவரை திரும்பவும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அழைத்து கேப்டன் ஆக்கியது.

- Advertisement -

இது அணி ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் மும்பை இந்தியன்ஸ் வீரர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த ஐபிஎல் தொடரில் வெறும் 4 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்திற்கு சென்று தொடரை விட்டே வெளியேறியது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர் தொடங்குவதற்கு முன்பாக மகேந்திர சிங் தோனி தனது கேப்டன் பதவியை விட்டு விலகி ருத்ராஜ் வசம் ஒப்படைக்க, கோப்பையை வெல்ல முடியாவிட்டாலும் ஓரளவு சிறப்பான வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்துடன் வெளியேறியது.

இந்த சூழ்நிலையில் ருத்ராஜை கேப்டனாக மக்கள் ஏன் ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்கான முழு விளக்கத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாத் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும் பொழுது
“மகேந்திர சிங் டோனிக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருத்ராஜ்தான் வரப்போகிறார் என எங்களுக்குள் ஒரு பேச்சு இருந்தது. மேலும் அதற்கான சூழ்நிலைகளையும் அணியின் பயிற்சியாளர் பிளமிங் மற்றும் கேப்டன் தோனி ஆகியோர் சரியாக செயல்படுத்தினார்கள்.

- Advertisement -

அதனால் தோனிக்குப் பிறகு ருத்ராஜ்தான் வரப்போகிறார் என செய்திகள் பரவிய நிலையில் மக்களும் அதை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ள தயாரானார்கள். இந்த சூழ்நிலையில் தொடருக்கு முன்னதாக தோனி தனது கேப்டன் பதவியை ருத்ராஜிடம் ஒப்படைக்கும் பொழுது மக்களும் அதை முழுமனதாக ஏற்றுக் கொண்டு ருத்ராஜை வரவேற்கத் தயாரானார்கள்.

இதையும் படிங்க:டி20 உலக கோப்பையில் தினேஷ் கார்த்திக்காக காத்திருக்கும் புதிய ரோல்.. இந்த நிகழ்வுக்காக என்னால் காத்திருக்க முடியவில்லை – தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சி பேட்டி

அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவி தானாகவே முன் வந்து தோனி அளித்திருக்கிறார். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவி ரோகித் சர்மாவிடமிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் இதன் உண்மையான கருத்து.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles