டி20 உலக கோப்பையில் தினேஷ் கார்த்திக்காக காத்திருக்கும் புதிய ரோல்.. இந்த நிகழ்வுக்காக என்னால் காத்திருக்க முடியவில்லை – தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சி பேட்டி

17 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.

- Advertisement -

கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே இறுதிப் போட்டி வருகிறது ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் இறுதியில் தொடர்ச்சியாக ஆறு வெற்றிகளை பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் எலிமினேட்டர் போட்டியில் ஏற்பட்ட தோல்வியால் பெங்களூர் அணியால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை. இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் மூத்த வீரரான தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். 35 வயதாகி வரும் இவர் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்காக இந்த முடிவை எடுத்ததாக கூறி இருக்கிறார்.

- Advertisement -

தற்போது தினேஷ் கார்த்திக் வருகிற டி20 உலக கோப்பையில் ஒரு புதிய அவதாரத்தை எடுத்து இருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட தினேஷ் கார்த்திக்கை ஐசிசி எலைட் வர்ணனையாளர் குழுவில் ஒருவராக அறிவித்திருக்கிறது. எனவே அவர் வருகிற டி20உலக கோப்பையில் எலைட் பிரிவில் வர்ணனையாளராக செயல்பட இருக்கிறார். தினேஷ் கார்த்திக் ஏற்கனவே நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது கமெண்டரியில் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்து ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றார்.

டி20 உலக கோப்பையில் வர்ணனையாளராக செல்ல இருப்பது குறித்து தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது
“டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் என்பது பல வழிகளில் உற்சாகமாக ஒன்றாக அமையக்கூடும். 20 அணிகள், 55 போட்டிகள் மேலும் புதிய மைதானங்கள் என கலவையான அனுபவத்தை கொடுக்க இருக்கிறது.

- Advertisement -

இந்த வர்ணனையாளர் குழுவில் நானும் ஒரு நபராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடன் விளையாடிய வீரர்கள் குறித்து நான் பேச இருப்பது எனக்குள் சுவாரசியத்தை ஏற்படுத்தும். என்னால் இந்த நிகழ்வுக்காக காத்திருக்க முடியவில்லை” என்று தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிந்தவுடன் ஜூன் இரண்டாம் தேதி முதல் டி20 உலக கோப்பை தொடர் தொடங்க உள்ளது.

இதையும் படிங்க:இவங்க 3 பேரால எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. பயிற்சியாளரின் ஒரு முடிவு போட்டியை மாற்றியது.. வெற்றிக்குப் பின்னர் பேட் கம்மின்ஸ் பேட்டி

இதற்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக தயாராகி வரும் நிலையில், தொடரை நடத்தும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் மைதானங்களை முழு வேகமாக தயார் படுத்தி வருகின்றன. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் நடைபெற உள்ள இந்தத் தொடர் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி டி20 உலக கோப்பையை கைப்பற்றாததால் இந்த ஆண்டு எப்படியாவது கோப்பை mயை வெல்ல முயற்சிக்கும் முனைப்பில் இந்திய அணியும் களமிறங்குகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles