நேற்று நடைபெற்ற ஐபிஎல் இரண்டாவது தகுதி சுற்றுப்போட்டியில் சன்ரைசர்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
சன்ரைசர்ஸ் அணி நிர்ணயத்த 176 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது. அணியின் வெற்றி குறித்து சில முக்கிய காரணங்களை சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறி இருக்கிறார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாசை இழந்த சன் ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ஹெட் 34 ரன்கள், ராகுல் திருப்பாதி 15 பந்துகளில் 37 ரன்களும், இறுதிக்கட்டத்தில் கிளாசன் 34 பந்துகளில் 50 ரன்கள் குவித்தனர்.
ராஜஸ்தான் அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஆவேஸ் கான் நான்கு ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்த மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் இந்த வெற்றி இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கியது. சென்னை ஆடுகளம் இரண்டாவது பாதியில் நின்று வந்ததால் ராஜஸ்தான் அணி பேட்ஸ்மேன்களால் சுலபமாக ரன்களை குவிக்க முடியவில்லை.
தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 42 ரன்கள் குவிக்க, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஜூரேல் கடைசி கட்டத்தில் 35 பந்துகளில் சிறப்பாக விளையாடி 56 ரன்கள் குவித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் விரைவில் ஆட்டம் இழக்க சன்ரைசர்ஸ் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இதனால் 36 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்த வெற்றிக்குப் பின்னர் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் கூறும் பொழுது
“எங்கள் அணி வீரர்கள் எல்லா நேரங்களிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கினார்கள். அணிக்குள் ஒரு நேர்மறையான சூழல் இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். ஃபைனல் செல்வதே எங்கள் இலக்காக இருந்தது. நாங்கள் அதனை தற்போது சிறப்பாக செய்து முடித்து இருக்கிறோம். எங்கள் அனுபவத்தை குறைத்து நாங்கள் எப்போதும் மதிப்பிட மாட்டோம். புவி, நட்டு மற்றும் உனத் கட் ஆகியோர் எனது வேலையை எளிதாக்கி விடுகிறார்கள்.
இதையும் படிங்க:கம்மின்ஸ்க்கு தொட்டதெல்லாம் தங்கம் போல.. சன்ரைசர்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.. 36 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தோல்வி
சபாஷ் அகமதை இம்பாக்ட் பிளேயராக கொண்டு வந்தது பயிற்சியாளர் வெட்டோரியின் முடிவு.அதே சமயத்தில் அபிஷேக்சர்மா சிறப்பாக பந்து வீசினார். இந்தப் போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினால் 170 ரன்கள் சற்று கடினமாக இருக்கும் என்று நம்பினோம். ஒவ்வொரு போட்டிக்கும் வித்தியாசமான ஆடுகளங்கள் கொடுக்கப்படுகின்றன. இதனால் நாங்கள் ஆடுகளம் குறித்து எதுவும் முடிவு செய்வதில்லை. அணி நிர்வாகத்தில் 70 சதவீதம் பேர் தங்களது இதயத்தையும் ஆன்மாவையும் அணிக்காக கொடுக்கிறார்கள். இன்னும் ஒரே ஒரு போட்டி மட்டுமே இருக்கிறது” என்று கூறுகிறார்.

