இன்று சிஎஸ்கே அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் தோல்விக்கான காரணம் குறித்து கேப்டன் ருதுராஜ் பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு ருதுராஜ் 60 பந்தில் 74 ரன்கள் எடுத்தார். அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய குஜராத் அணிக்கு சாய் சுதர்ஷன் 46 பந்தில் 86 ரன்கள் எடுத்தார். குஜராத் 16.4 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு டார்கெட்டை அடித்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இது குறித்து ருதுராஜ் பேசும்போது “முதல் டைம் அவுட் முடியும்போது நான் பிளமிங் இடம் அதிரடியாக பாசிட்டிவாக விளையாடுகிறேன் என்று சொன்னேன். ஆடுகளத்தில் பவுன்ஸ் மாறி வருகிறது அட்ஜஸ்ட் செய்து விளையாடுகிறேன் என்று சொன்னேன். ஆனால் சொன்னபடி என்னால் செய்ய முடியவில்லை. சூழ்நிலையை மிகச் சரியாக கணிக்க முடியாது”
“இதுவே வேறு ஆடுகளமாக இருந்திருந்தால் என்னால் அதிரடியாக ஆடி இருக்க முடியும். முதல் இரண்டு விக்கெட் வேகமாக விழுந்த காரணத்தினால் இன்பாக்ட் பிளேயராக சர்பராஸ் கான் வந்தார். கொஞ்சம் தாமதமாக வைக்க விழுந்து இருந்தால் நாங்கள் முகேஷ் சவுத்ரியை இம்பேக்ட் பிளேயராக கொண்டு வந்திருப்போம்” என்று கூறியிருக்கிறார்.

