தற்போது இருப்ப 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் மட்டும் இந்தியா சவுத் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா நியூசிலாந்து பாகிஸ்தான் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் 350 ரண்களுக்கு மேல் வைத்திருக்கின்றன. அதிலும் தென்னாப்பிரிக்கா அணி இலங்கையுடன் 428 ரன்களும் இங்கிலாந்து அணியுடன் 399 ரன்களும் எடுத்தது.
தற்போது நவீன கிரிக்கெட் விதிகளின்படி ஒரு நாள் போட்டிகளில் இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் முதல் பவர் ப்ளேக்கு பிறகு 30 அடி உள் வட்டத்திற்கு வெளியே 40 ஓவர்கள் வரை நான்கு வீரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் இறுதி பத்து ஓவர்களில் தான் ஐந்து வீரர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதுபோன்று ஐசிசி நடைமுறைப்படுத்தி இருக்கும் புதிய விதிகளால் பந்துவீச்சாளர்கள் பாதிக்கப்படுவதாக பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் விமர்சனம் செய்திருந்தனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரும் ராவல் பிண்டி எக்ஸ்பிரஸ் என கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படும் சோயப் அக்தர் இந்த புதிய விதிமுறைகளை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். இதுபோன்ற விதிமுறைகள் வந்து வீச்சாளர்களுக்கு பாதகமாக அமைந்திருக்கிறது எனவும் கடுமையாக சாடி இருக்கிறார் அவர்.
இது தொடர்பாக பாகிஸ்தானின் தொலைக்காட்சியில் பேசியிருக்கும் அவர்” தற்கால கிரிக்கெட்டை பிராடு என்று தெரிவித்திருக்கிறார். மேலும் இரண்டு புதிய பந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் எந்த பேட்ஸ்மானாலும் 30,000 ரன்கள் எடுக்க முடியும் எனவும் தெரிவித்திருக்கிறார். நான் சச்சின் டெண்டுல்கர் இன்சமாம் உல் ஹக் முகமது யூசுப் மற்றும் ஜாக் காலிஸ் போன்ற வீரர்களை ஏன் மதிக்கிறேன் என்றால் அவர்கள் பழைய மென்மையான பந்துகளில் அதிக ரன்கள் சேர்த்தவர்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய அத்தர் ” ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரே ஒரு புதிய பந்து பயன்படுத்தப்பட்டால் அதில் அதிக ரன்களை எடுக்கும் வீரர்களுடன் நான் இருப்பேன். அதுதான் திறமையான விளையாட்டு . மேலும் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் உள் வட்டத்திற்கு வெளியே 6 வீரர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். இப்போது எவ்வளவு தான் நீங்கள் ரன்கள் சேர்த்தாலும் முன்னர் விளையாடிய வீரர்களின் விளையாட்டு இருக்கு ஈடாகாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பந்துவீச்சாளர்களை வந்துவீச்சு இயந்திரம் போல தற்கால விதிமுறைகளின் மூலம் மாற்றி வைத்திருக்கிறது. இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தனது கண்டனங்களை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐசிசி யின் விதிமுறைகள் பெரும்பாலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறி வருவதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். இதனால் தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டிகளில் அதிக அளவில் ரன்கள் குறிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“Today’s cricket is fraud.”
— Cricketopia (@CricketopiaCom) November 9, 2023
~ Shoaib Akhtar pic.twitter.com/YQz1n7GzOa
முன்பு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே எடுக்கப்பட்டு வந்த 400 ரன்கள் தற்போது ஒரு நாள் போட்டிகளிலும் பரவலாக எடுக்கப்பட்டு வருகிறது . இந்த ஒரு வருடத்தில் மட்டும் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஸ்ரீலங்கா அணிகளுக்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் நான் ஒரு ரன்களுக்கு மேல் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் மேக்ஸ்வெல் ஆறாவது வீரராக களம் இறங்கி 201 ரன்கள் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

