இந்தியா ஆடுகளத்தை மாத்தியதாக எழும்பிய சர்ச்சை.. பேட் கம்மின்ஸ் கொடுத்த அதிரடி பதில்.. என்ன நடந்தது.?

2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் முதல் அர இறுதிப்போட்டியில் இன்று மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டிக்கு முன்பாக ஆடுகளங்கள் பற்றிய சர்ச்சை ஏற்பட்டது . பிசிசிஐ மற்றும் ஆடுகள் தயாரிப்பாளர்கள் இந்தியாவிற்கு சாதகமான ஆடுகளத்தை பயன்படுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின.

- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது அறை இறுதிப்போட்டியில் பயன்படுத்தி இருக்கும் ஆடுகளம் இதற்கு முந்தைய போட்டியில் பயன்படுத்திய ஆடுகளம் எனவும் இதன் மூலம் இந்திய அணிக்கு சாதகமாக மெதுவான ஆடுகளம் பயன்படுத்த படுவதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.

- Advertisement -

இந்நிலையில் இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து பேசிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இது போன்ற தகவல்களை மறுத்திருக்கிறார் . இதுவரை விளையாடி இருக்கும் எல்லா ஆடுகளங்களும் இரண்டு அணிகளுக்குமே சமமாக இருந்ததாகவும் ஐசிசி மீது தான் முழு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இரண்டாவது அரை இறுதி போட்டிக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இந்த தகவல்களை தெரிவித்தார்.

- Advertisement -

இது தொடர்பாக தனது கருத்துக்களை பதிவு செய்திருக்கும் அவர் ” நானும் அந்த தகவல்களை பார்த்தேன். ஐசிசி இடம் சுதந்திரமான ஆடுகள கண்காணிப்பாளர் இருக்கிறார். அவரது மேற்பார்வையின் கீழ் உலகக் கோப்பை காண ஆடுகளங்கள் தயாரிக்கப்படுகின்றன . அவர்கள் இரண்டு அணிக்கும் சமமாக இருக்கும் வகையில் தான் ஆடுகளங்களை தயார் செய்கிறார்கள். எந்த ஒரு அணிக்கும் சாதகமாக இருப்பது போன்று இதுவரை நடந்ததாக தெரியவில்லை” என கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசி இருக்கும் அவர் ” நாங்கள் விளையாடிய எந்த போட்டிகளிலும் ஆடுகளத்தில் எந்த குறையும் இல்லை. இரண்டு அணிகளுக்கும் சமமாகவே ஆடுகளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் விளையாடும் ஆடுகளங்கள் பற்றி எந்த பிரச்சினையும் எங்களுக்கு இருந்ததில்லை என தெரிவித்திருக்கிறார். அரை இறுதிப் போட்டிக்கு புதிய ஆடுகளம் வழங்கப்பட இருந்ததாகவும் பின்னர் இந்தியாவிற்கு சாதகமாக இருக்கும் வகையில் பழைய ஆடுகளத்தையே பயன்படுத்த முடிவு செய்ததாகவும் ஆடுகளம் சர்ச்சை குறித்த தகவல் வெளியாகி இருந்தது.

- Advertisement -

ஐசிசி விதிமுறைகளின் படி ” ஆடுகளத்தை தயார் செய்ய வேண்டியது உலகக் கோப்பையை நடத்துகின்ற நாடு மற்றும் எந்த இடத்தில் போட்டி நடைபெறுகிறதோ அந்த கிரிக்கெட் அசோசியேஷன் பொறுப்பு. மேலும் நாக் அவுட் போட்டிகளுக்காக புதிய ஆடுகளத்தை பயன்படுத்த வேண்டும் என்ற எந்த கட்டாயமும் அவசியமும் இல்லை.

மும்பை ஆடுகளத்தை ஆய்வு செய்த நியூசிலாந்து அணியின் வீரர்களும் அந்த அணியின் நிர்வாகமும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு அணிகளுக்கும் இடையே தற்போது நடைபெற்று வரும் முதலாவது அரையிறுதியில் விராட் கோலி ஐம்பதாவது சதத்தை பதிவு செய்து புதிய உலக சாதனை படைத்திருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles