ஆடுகளத்தை மாற்றியதாக எழுந்த சர்ச்சை.. நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனின் தரமான பதில்.. என்ன நடந்தது.!

தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் முதல் அரையறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது. முன்னதாக நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 397 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 327 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இதனால் இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்று இறுதிக்கு தகுதி பெற்றது. இந்திய அணியின் முகமது சாமி 57 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இவர் இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணியின் அரையிறுதி போட்டிகள் துவங்குவதற்கு முன்பாகவே ஆடுகளங்கள் பற்றிய சர்ச்சை வெளிவர தொடங்கிவிட்டது. இந்திய அணி தனக்கு சாதகமான பயன்படுத்திய ஆடுகளத்தையே இந்த போட்டிக்கு தயார் செய்திருப்பதாக பல்வேறு பத்திரிகைகள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் குற்றம் சாட்டியிருந்தனர். இது தொடர்பாக நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆடுகளம் தொடர்பான சர்ச்சைகளை தீர்க்கமாக மறுத்திருக்கிறார்.

- Advertisement -

இது தொடர்பாக போட்டிக்கு பின் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் ஆடுகளத்தில் எந்தவித சர்ச்சையும் இல்லை. இரண்டு அணிகளுமே சிறப்பாக விளையாடினோம். இந்தியா எங்களை விட சிறப்பாக விளையாடியதால் வெற்றி பெற்றிருக்கிறது. மற்றபடி வேறு எந்த சர்ச்சைகளும் இந்த போட்டியில் இருப்பதாக நான் நினைக்கவில்லை என தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக விரிவாக பேசியிருக்கும் அவர் ” இந்திய அணி தான் தற்போது உலகின் மிகச் சிறந்த அணி. அவர்கள் விளையாடும் விதம் மிகவும் அற்புதமாக இருக்கிறது. எந்த ஒரு பலவீனங்களும் இல்லாத முழுமையான அணியாக இந்தியா வழங்குகிறது. முதலில் நீ சுற்று போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிலிருந்து நம்பிக்கையை எடுத்துக்கொண்டு அரையிறுதி போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் தான் சிறந்த அணி” என தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” அவர்களது மனநிலை மிகவும் வலிமையாக இருக்கிறது. இந்த அரை இறுதி போட்டியில் வெற்றி பெற்ற நம்பிக்கையுடன் இறுதிப் போட்டியை எதிர்கொள்வதற்கு இந்தியா தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் மும்பை கிரிக்கெட் போட்டியில் பழைய ஆடுகளம் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த கேள்விக்கு பதிலளித்திருக்கும் கேன் வில்லியம்சன் அதனை முற்றிலுமாக மறுத்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசிய அவர் ” இந்திய அணியும் இந்த ஆடுகளத்தில் தான் முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்களை பெற்றது. நாங்கள் முதலில் பேட்டிங் செய்யும்போது புதிய பந்தில் பந்துருச்சாளர்களுக்கு நல்ல உதவி கிடைத்தது. இது எப்போதும் வான்கடே மைதானத்தில் இருக்கக்கூடிய ஒன்றுதான். அதன் பிறகு நாங்களும் சிறப்பாக ஆடி ஒரு கட்டத்தில் வெற்றியை நெருங்கும் தருவாயில் இருந்தோம் . 327 ரன்கள் எடுத்திருக்கிறோம். எனவே ஆடுகளம் இரண்டு அணிகளுக்கும் சமமானதாகவே அமைக்கப்பட்டிருந்தது. இதில் எந்த சர்ச்சைகளும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை” என பதிலடி கொடுத்திருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles