சூரியவன்சி தப்பா எடுத்துக்காத தம்பி.. உனக்கு இந்திய அணி வேண்டாம்.. லாரா பாணில வா – பிராத்வய்ட் பேச்சு

நேற்று ஐதராபாத் அணிக்கு எதிராக பைபவ் சூரியவன்சி 36 பந்துகளில் அதிரடி சதம் அடித்தார். இந்த நிலையில் எல்லோரும் அவரை இந்திய அணியில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறி வருகிறார்கள். ஆனால் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கார்லஸ் பிராத்வயிட் இதற்கு எதிரான கருத்தை கூறி இருக்கிறார்.

- Advertisement -

தற்போது வைபவ் சூரியவன்சிக்கு 15 வயது ஆகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகும் அடிப்படை வயதை அவர் அடைந்து விட்டார். எனது ஐபிஎல் தொடர் முடிந்ததும் உடனடியாக அவருக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “சூரியவன்சி என்னை மன்னித்துவிடு தம்பி. லாரா ஆரம்ப காலகட்டத்தில் தலைமுறையின் திறமையாளர் என எல்லோருக்கும் தெரியும். ஆனால் வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் அவரை உடனடியாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தவில்லை. மூத்த திறமையான வீரர்களுடன் சுற்றுப்பயணங்களில் அவரை கலந்து கொள்ள விட்டது. அவர் அங்கிருந்து கற்றுக் கொண்டார். பிறகு என்ன நடந்தது என உலகத்திற்கு தெரியும்”

- Advertisement -

“அதே சமயத்தில் இந்த பையன் விளையாடுவதை பார்க்கும் பொழுது ஒரு மனிதனாக நான் தகுதியற்றவனாக உணர்கிறேன். இவர் 15 வயதில் பும்ரா போன்ற ஒரு பவுலரை சிறப்பாக அடிக்கிறார். ஆனால் நானோ என் அம்மாவிடம் அடி வாங்கிக் கொண்டிருந்தேன்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles