இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே கொல்கத்தா அணிக்கு எதிராக 32 ரன்கள் வித்தியாசத்தில் தனது இரண்டாவது வெற்றியை பெற்றது.
இந்த போட்டியில் கொல்கத்தா டாஸ் வென்று முதலில் பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்தது. சிஎஸ்கே 32 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இது குறித்து கேப்டன் ருதுராஜ் பேசும்போது ” இந்த ஆடுகளம் போக போக மாறிவிட்டது. முதலில் நாங்கள் 210 முதல் 220 ரன்கள் எடுக்க முடியும் என்று நினைத்தோம். ஆனால் ஏழு ஓவர்கள் தாண்டிய பிறகு திடீரென ஆடுகளத்தில் பந்து திரும்பி நின்று வந்தது. எனவே 180 ரன்கள் தாண்டி எவ்வளவு தூரம் கிடைத்தாலும் பரவாயில்லை என்று முடிவு செய்தோம்”
“அணி தொடர்ந்து தோல்வியடையும் பொழுது அது என்னுடைய மனதில் கொஞ்சம் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்போது இந்த வெற்றி என்னை நம்பிக்கை அடைய வைத்திருக்கிறது. என்னிடமிருந்து ஒரு பெரிய ரன் பக்கத்தில் இருக்கிறது. சீக்கிரத்தில் நான் அதை செய்வேன்” என்று கூறியிருக்கிறார்.

