BAN vs NED.. நெதர்லாந்து அபாரம்.. 87 ரன்னில் பங்களாதேஷை வீழ்த்தி முன்னேற்றம்.!

தற்போது நடைபெற்று வரும் 13 வது உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. இந்தப் போட்டி மேற்குவங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் அமைந்துள்ள இடம் கார்டன்ஸ் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நெதர்லாந்து அணியின் துவக்க வீரர்கள் மேக்ஸ் மெக் டவுட் ரன் எதுவும் எடுக்காமலும் விக்ரம்ஜித் சிங் 3 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இவர்களைத் தொடர்ந்து இந்தப் போட்டியில் களம் இறங்கிய பரேசி 41 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து ஆக்கர் மேன் 15 ரன்னிலும் பஸ் டி லீட் 17 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

- Advertisement -

இவர்களைத் தொடர்ந்து கேப்டன் எட்வர்ட்ஸ் மற்றும் ஏங்கல்பிரெக்ட் இருவரும் ஜோடி சேர்ந்து நெதர்லாந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இவர்கள் இருவரும் ஆறாவது விக்கெட்டுக்கு 78 ரன்கள் பார்ட்னர்ஷிப்பாக சேர்த்தனர். சிறப்பாக ஆடிய எட்வர்ட்ஸ் 89 பந்துகளில் ஆறு பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் . இவரைத் தொடர்ந்து ஏங்கல்பிரெக்ட் 35 ரன்களில் அவுட் ஆனார். இறுதியில் வாண் பீக் அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் ஒரு சிக்சர் மற்றும் இரண்டு பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்தார். இதனால் நெதர்லாந்து அணி 50 ஓவர்களில் 229 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் இஸ்லாம் டஸ்கின் அகமது முஸ்தஃபீஸூர் மற்றும் மெஹதி ஹசன் ஆகியோர் 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி அளித்தனர் நெதர்லாந்து அணியின் பந்துவீச்சாளர்கள். பங்களாதேஷ் அணியின் துவக்க வீரரான லிட்டன் தாஸ் 3 ரன்னிலும் தன்ஷித் ஹசன் 15 ரன்னிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றினர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நஜ்முல் ஹுசைன் சாண்டோ ஒன்பது ரன்னில் அவுட் ஆனார். அந்த அணியின் அனுபவ வீரர்களான கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 5 ரன்னும் முஷ்பிக்குர் ரஹீம் ஒரு இரண்டிலும் ஆட்டம் இழந்தனர்.

பங்களாதேஷ் அணியின் மெஹதி ஹசன் மிராஸ் ஓரளவு நிலைத்து நின்று ஆடி 35 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மேலும் கடந்த போட்டியில் சதம் அடித்த மஹ்முதுல்லாஹ் 20 ரன்னில் ஆட்டம் இழந்தார். மேலும் பின் வரிசையில் களமிறங்கிய மெகதி ஹசன் 17 ரன்னிலும் டஸ்கி நகமது 11 ரன்னிலும் அவுட் ஆகினர். முஸ்தபிஸர் ரஹ்மான் இறுதியாக 20 ரன்னில் அவுட் ஆனார்.

- Advertisement -

இதனால் பங்களாதேஷ் அணி 42.2 ஓவர்களில் 142 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது . இதன் மூலம் நெதர்லாந்து 87 ரன்களில் அபார வெற்றி பெற்றுள்ளது. இது அந்த அணி இந்த உலக கோப்பையில் பெரும் இரண்டாவது வெற்றியாகும். இதற்கு முன்பு தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது. நெதர்லாந்து அணியின் பந்துவீச்சில் வான்மீகிரன் நான்கு விக்கெட்டுகளும் பஸ் டி லீட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். மேலும் ஆரியன் தத், வான் பீக் மற்றும் ஆக்கர் மேன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 10வது இடத்தில் இருந்த நெதர்லாந்து அணி புள்ளிகள் பட்டியலில் எட்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. மேலும் இந்த தோல்வியின் மூலம் பங்களாதேஷ் அணி 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது என்றே கூறலாம். ரன் ரேட் மற்றும் கணக்குகளின் படி அந்த அணி இனி நடைபெற இருக்கும் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாலும் தகுதி பெற வாய்ப்புகள் இருப்பதாகவே தோன்றினாலும் கிட்டத்தட்ட பங்களாதேஷ் அணி உலக கோப்பையில் இருந்து நாக் அவுட் செய்யப்பட்டது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles