ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் மகேந்திர சிங் தோனி பேட்டிங் செய்ய களத்திற்குள் நுழைந்த பொழுது லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரரான டீ காக்கின் மனைவி கட்டியிருந்த ஸ்மார்ட் வாட்ச் அலறியது.
புனே மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. சென்னை அணியின் பேட்டிங்கில் ரகானே 36 ரன்களும், ஜடேஜா 40 பந்துகளில் 57 ரன்களும், (5 பவுண்டரி,1 சிக்ஸர்), மொயின் அலி 20 பந்துகளில் 30 ரன்களும் குவித்தனர். பின் மகேந்திர சிங் தோனி 9 பந்துகளில் 3 பவுண்டரிகள் இரண்டு சிக்சர்கள் என அதிரடியாக விளையாடி 28 ரன்கள் குவித்தார்.
மகேந்திர சிங் தோனியின் அதிரடி ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. மைதானம் முதலில் பந்துவீச்சுக்கு சாதகமாக காணப்பட்டாலும் நேரம் செல்லச் செல்ல பேட்டிங்க்கு சாதமாக மாறியது. பின்னர் இலக்கை நோக்கி களம் இறங்கிய லக்னோ அணி 19 ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 180 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.
தொடக்க ஆட்டக்காரர் ராகுல் 53 பந்துகளில் 82 ரன்கள், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டிகாக் 43 பந்துகளில் 54 ரன்கள் குவித்தனர். இதனால் லக்னோ அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று சிறப்பான வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
இப்போட்டியில் சென்னை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ஒரு சுவாரசியமான சம்பவம் நடைபெற்றது. 143 ரன்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்த போது மகேந்திர சிங் தோனி பேட்டிங் செய்ய மைதானத்திற்குள் நுழைந்தார். அப்போது லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரரான டீ, காக்கின் மனைவி கட்டி இருந்த ஸ்மார்ட் வாட்ச்சில் அதிக சத்தம் எழுந்தால் எச்சரிக்கை கூடிய தொழில்நுட்ப வசதி இருக்கிறது.
தோனி பேட்டிங் செய்ய வந்த பொழுது ரசிகர்களின் அதிக சத்தத்தால் அந்த வாட்ச் அலறியது. அதை அவர் பார்த்த பொழுது 95 டிசிபல் அளவுக்கு ஒலி மாசு இருப்பதாக கூறி இதே சத்தத்தை பத்து நிமிடங்கள் வரை கேட்டால் தற்காலிகமாக காது கேட்காமல் கூட போகலாம் என்று அபாய எச்சரிக்கையும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வாட்ச் அனுப்பிய குறுந் தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மனைவி பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க:பந்துவீச்சாளர்கள் தொடர்ச்சியாக இதே தவறை செய்கிறார்கள்.. தோல்விக்கு பின்னர் சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் பேட்டி
அந்தப் பதிவையும் டோனி ரசிகர்கள் தங்களது சமூக வலைதளங்களில் ஷேர் செய்து அதனை வைரல் ஆகி வருகின்றனர். ஏற்கனவே கொல்கத்தா, சென்னை போட்டியின் போது ரசிகர்களின் அதிக சத்தத்தால் கொல்கத்தா அணி வீரர் ரசல் தனது காதுகளை மூடிக்கொண்ட சம்பவம் நினைவிருக்கலாம்.

