வங்கதேச கிரிக்கெட்டின் மூத்த அனுபவ வீரரான ஷகிப் அல் ஹசன் கிரிக்கெட்டுக்கு எவ்வாறு பெயர் பெற்றவரோ அதே போல கோபத்திற்கும் பெயர் போன்றவர். இவர் சமீபத்தில் செல்பி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரை கோபத்தில் தாக்க முயற்சித்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வங்கதேச கிரிக்கெட் அணிக்காக 2006ஆம் ஆண்டு அறிமுகமாகி தற்போது வரை விளையாடிக் கொண்டிருக்கும் மூத்த அனுபவ வீரரான சகிப் அல் ஹசன் இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளிலும், 247 ஒரு நாள் போட்டிகளிலும், 117 டி20 போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்.
மிகவும் திறமை வாய்ந்த ஆல் ரவுண்டரான இவர் வங்கதேசத்தின் வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார். இவர் பேட்டிங் மட்டுமல்லாமல் பந்து வீச்சிலும் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கக் கூடியவர். வளர்ந்து வரும் வங்கதேச கிரிக்கெட் அணியில் இவரது பங்கு பெரும் அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது.
இவர் ஐபிஎல் இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட்டில் எந்த அளவு இவர் திறமை வாய்ந்தவரோ அதேபோல அவ்வப்போது இவரின் மைதான நடவடிக்கைகளிலும் இவரைக் கூர்ந்து கவனிக்க வைத்து விடுவார்.
அண்மையில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் லீக் தொடரில் அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஷகீப் அல் ஹசன் ஸ்டம்ப்களை எட்டி உதைத்த சம்பவம் அனைவருக்கும் நினைவு இருக்கலாம். சமீப காலமாக இவரது நடத்தைகள் கிரிக்கெட் உலகில் பேசு பொருள் ஆகி வருகிறது. வங்கதேச கிரிக்கெட் அணி தற்போது உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் ஜிம்பாப்வே அணியுடன் டி20 தொடரில் பங்கேற்று வருகிறது.
ஷகிப் அல் ஹாசன் தனது கண் பார்வையில் பிரச்சனை இருப்பதால் டி20 தொடரில் இருந்து விலகிய நிலையில் தற்போது ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் மைதானத்தில் இவர் சக வீரர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது அப்போது அங்கு வந்த ரசிகர் ஒருவர் ஷகிப்புடன் செல்பி எடுக்க முயற்சி செய்தார். உடனே ஷக்கிப் வேண்டாம் என்று கூறிய நிலையில் கோபத்தில் அந்த ரசிகரின் செல்போனை புடுங்க முயற்சி செய்தார்.
அந்த ரசிகர் தர மறுக்கவே உடனே கோபத்தில் அவரது கழுத்தைப் பிடித்து தாக்கியும் உள்ளார். இந்த காட்சி மைதானத்தில் உள்ள கேமராக்களில் வீடியோவாக பதிவாகி இருக்கிறது. இதைத்தொடர்ந்து அந்த ரசிகர் சோகத்துடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் ஷகிப்பின் இந்த செயலுக்கு தற்போது கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
Shakib al Hasan 🇧🇩🏏 went to beat a fan who tried to take a selfie 🤳
— Fourth Umpire (@UmpireFourth) May 7, 2024
Your thoughts on this 👇👇👇 pic.twitter.com/k0uVppVjQw

