என்ன சொல்றதுனு தெரியல.. 240 ரன்கள் அடிச்சிருந்தாலும் தோத்துருப்போம்.. இந்த மாதிரி பேட்டிங் நான் டீவிலதான் பார்த்து இருக்கேன்.. தோல்விக்கு பின்னர் பேசிய கே எல் ராகுல்

சன்ரைசர்ஸ் அணையின் சொந்த மைதானமான அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற லக்னோ மற்றும் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டியில் லக்னோ அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.

- Advertisement -

லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் இந்த தோல்விக்கான காரணங்கள் குறித்து கூறியிருக்கிறார். டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த லக்னோ அணி அதற்கு ஏற்ப விளையாடவில்லை என்றுதான் கூற வேண்டும். பவர் பிளவில் மொத்தமாக இரண்டு விக்கெட்டுகளை இழந்து 27 ரன்களை மட்டுமே குவித்திருந்தது.

- Advertisement -

அதற்குப் பிறகு பத்து ஓவர்களில் 57 ரன்கள் மட்டுமே குவித்த நிலையில் அணியின் கேப்டன் கே எல் ராகுல் மிகவும் மந்தமாகவே விளையாடினார். 33 பந்துகளை எதிர் கொண்ட அவர் வெறும் 29 ரன்கள் மட்டுமே குவித்துவிட்டு அவுட் ஆகி வெளியேற, இறுதிக்கட்டத்தில் ஜோடி சேர்ந்த பூரான் மற்றும் பதோனி ஜோடி 52 பந்துகளுக்கு 99 ரன்கள் குவித்தது.

- Advertisement -

ஏன் இவர்கள் மூலமாகத்தான் லக்னோ அணி 165 ரன்கள் 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு குவித்தது. அதற்குப் பிறகு பேட்டிங் தொடங்கிய சன்ரைசர்ஸ் அணி லக்னோ அணியின் பேட்டிங்க்கு நேர்மாறாகவே விளையாடியது. ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய இவர்கள் விக்கெட் இழப்பின்றி வெறும் 58 பந்துகளுக்கு 167 ரன்கள் குவித்தது. பத்து ஓவர்கள் வித்தியாசத்தில் மிகச் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது சன்ரைசர்ஸ் அணி.

இந்தத் தோல்விக்கு பின்னர் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கே எல் ராகுல் கூறும் பொழுது
“இந்த தோல்வி குறித்து என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. இது போன்ற ஆட்டத்தை நான் டிவியில் மட்டுமே பார்த்திருக்கிறேன். அவர்களின் பேட்டிங் அபாரமாக நம்ப முடியாத வகையில் இருந்தது. அவர்கள் எல்லா பந்துகளையும் பேட்டிங் மிடில் பகுதியில் ஆடுவது போல இருந்தது.

- Advertisement -

அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். அவர்களின் சிக்சர் அடிக்கும் திறமையை கண்டு நான் வியக்கிறேன். நாங்கள் பந்து வீசும் போது ஆடுகளத்தின் தன்மையை அறிந்து கொள்ள அவர்கள் எங்களுக்கு நேரம் தரவில்லை. அணி தோல்வியடையும் போது நீங்கள் எடுத்த முடிவுகள் குறித்த கேள்வி வரும். நாங்கள் 40 முதல் 50 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம் என்று நினைக்கிறேன். ஆனால் இந்தப் போட்டியில் இவர்களுக்கு எதிராக 160 ரன்கள் இல்லை, 250 ரன்கள் குவித்து இருந்தாலும் கூட அதை இவர்களால் வெற்றி பெற்றிருக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:58 பந்து 167ரன்.. இந்த ஆட்டம் போதுமா குழந்தை?.. லக்னோவை ஊதித் தள்ளிய சன்ரைசர்ஸ்.. மீண்டும் சிஎஸ்கேவுக்கு ஆப்பு

இந்த தோல்வியின் மூலம் லக்னோ அணியின் ரன் ரேட் மிகவும் பின்தங்கி ஆறு தோல்விகளுடன் தற்போது புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. இந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் இனி வரும் இரண்டு போட்டிகளிலும் நல்லா ரன் ரேட்டில் வெற்றி பெற வேண்டியது அவசியம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles