கவலைப்படாதீங்க நான் இருக்கேன்.. மளமளவென சரிந்த விக்கெட்.. இந்திய அணியை காப்பாற்றிய சூர்யா.. அதிர்ச்சி அளித்த யூஎஸ்ஏ

இன்று நடைபெற்று வரும் இந்தியா மற்றும் யுஎஸ்ஏ அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் விக்கட்டுகள் வேகமாக சரிந்தாலும் கடைசி வரை நின்று போராடிய இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து இந்திய அணி நல்ல ஸ்கோர் பெற உதவி இருக்கிறார். முதல் போட்டியிலேயே யூஎஸ்ஏ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

மும்பையில் நடைபெற்ற வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற யுஎஸ்ஏ முதலில் பந்து வீச தீர்மானிக்க அதன்படி இந்திய அணி பேட்டிங் களம் இறங்கியது. அபிஷேக் ஷர்மா தான் சந்தித்த முதல் பந்திலேயே அலிகான் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேற, திலக் வர்மா 16 பந்துகளில் 25 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். பின்னர் இஷான் கிஷான் 20 ரன்னில் வெளியேற, சூர்யா ஒரு முனையில் போராடினார்.

- Advertisement -

மறுமுனையில் விக்கெட்டுகள் வேகமாக சரிந்து கொண்டிருக்க, சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த சூர்யா கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 49 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸ் என 84 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் குவித்து இருக்கிறது. யு எஸ் ஏ களமிறங்க ரெடியாகி வருகிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles