நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 14 வயது இளம் வீரர் வைபவ் சூரியவன்சி அபார சதத்தை பதிவு செய்து அணியை வெற்றி பெறச் செய்த நிலையில் தற்போது பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் போட்டி முடிந்த பிறகு சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.
கடந்த லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிக்கு எதிராக அறிமுகமான வைபவ் சூரியவன்சி தனது முதல் போட்டியின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து தான் எப்படிப்பட்ட அணுகுமுறை கொண்ட வீரன் என்பதை தெளிவாக காட்டினார். அந்தப் போட்டியில் விரைவில் ஆட்டம் இழந்து வெளியேறினாலும் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்னில் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்தார். இந்த சூழ்நிலையில் தன்னுடைய திறமையை நிரூபிக்க பலமான குஜராத் அணிக்கு எதிரான போட்டி அவருக்கு காத்திருந்தது.
குஜராத் அணி செட் செய்த 209 ரன்கள் இலக்கை நோக்கி விளையாட ஆரம்பித்த நிலையில், தன்னுடைய இரண்டாவது பந்தில் சிக்ஸர் உடன் அடிக்க ஆரம்பித்தார். அதற்குப் பின்னர் 17 பந்தில் அதிவேக அரை சதம் மற்றும் 35 பந்தில் அதிவேக இரண்டாவது சதம் என வெறும் 14 வயதில் இப்படிப்பட்ட சாதனையை நிகழ்த்தி தன்னுடைய திறமை என்ன என்பதை தற்போது உலகத்திற்கு நிரூபித்து இருக்கிறார். இவரது அதிரடியின் மூலமாக ராஜஸ்தான் அணி 16 ரன்களிலேயே வெற்றி இலக்கை அடைந்தது.
இவருடைய சதம் குறித்து இந்திய முன்னாள் வீரர்கள் பலர் பாராட்டி வருகிறார்கள். சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, யுவராஜ் சிங் என பல்வேறு ஜாம்பவான் வீரர்களே இவருக்கு தற்போது புகழாரம் சூட்டி வருகிறார்கள். அந்த அளவிற்கு இவருடைய அபார திறமை தற்போது வெளிவந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் வைபவ் பேட்டிங் செய்த விதம் குறித்து அவர் கூறும் போது “இந்த தருணம் எனக்கு நன்றாக இருக்கிறது. இது என்னுடைய முதல் ஐபிஎல் சதமாகும். அதுவும் இது என்னுடைய மூன்றாவது போட்டியிலேயே வந்துள்ளது நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக கடந்த மூன்று முதல் நான்கு மாதங்களாக நான் பயிற்சிகளை எடுத்து வந்தேன், அதற்கான முடிவுகள் தான் தற்போது காண்பிக்கப்படுகிறது. நான் மைதானத்தை அதிகமாக பார்க்காமல் என்னுடைய பந்தில் மட்டும் நான் கவனம் செலுத்துவேன்.
இதையும் படிங்க:அந்த காலத்தில அப்ரிடி.. இப்போது வைபவ் சூர்யவன்சி.. சூறாவளியாய் சுழன்ற 14 வயது சிறுவன்.. யூசுப் பதான் சாதனை குளோஸ்
ஜெய்ஸ்வாலுடன் பேட்டிங் செய்தது எனக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்தது. ஏனென்றால் அவர் என்னை எப்போதும் நேர்மறையாக வைத்து இருந்தார். தேவையான நேரத்தில் எனக்கு ஆலோசனைகள் கொடுத்தார். அது எளிதாக பேட்டிங் செய்வதற்கு உதவியது. ஐபிஎல் தொடரில் சதம் அடித்தது கனவு போல இருக்கிறது. எனக்கு எந்த விதமான பயமும் கிடையாது. பவுலர்கள் என்னை டார்கெட் செய்வார்கள் என்பது குறித்து நான் சிந்திக்கவில்லை. என்னுடைய விளையாட்டில் மட்டும் நான் கவனம் செலுத்துகிறேன்” என்று பேசி இருக்கிறார்.

