அந்த காலத்தில அப்ரிடி.. இப்போது வைபவ் சூர்யவன்சி.. சூறாவளியாய் சுழன்ற 14 வயது சிறுவன்.. யூசுப் பதான் சாதனை குளோஸ்

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் வைபவ் சூர்யவன்சியின் பெயர் எந்த காலத்திலும் நிலைத்திருக்க போகிறது. குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்களை விளாசியது.

- Advertisement -

சாதனை

இதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் அணி வெறும் 15.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு ராஜஸ்தான் அணிக்காக களமிறங்கிய 14 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்சி முக்கிய காரணமாக அமைந்துள்ளார். சிறப்பாக ஆடிய அவர், 38 பந்துகளில் 11 சிக்ஸ், 7 பவுண்டரியுடன் 101 ரன்களை விளாசினார்.

- Advertisement -

35 பந்துகளில் சதம் விளாசியதன் மூலமாக வைபவ் சூர்யவன்சி ஏராளமான சாதனையை படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட 2வது அதிவேக சதம் இதுவாகும். இதற்கு முன்பாக 30 பந்துகளில் கிறிஸ் கெய்ல் சதம் விளாசி சாதனை படைத்திருந்தார். அதேபோல் இந்திய வீரர்களில் யூசுப் பதான் 37 பந்துகளில் சதம் விளாசியதே சாதனையாக இருந்தது.

- Advertisement -

ஆட்டநாயகன் விருது

அந்த சாதனையை வைபவ் சூர்யவன்சி முறியடித்துள்ளார். அதேபோல் ஐபிஎல் வரலாற்றில் சதம் விளாசிய மிகவும் இளம் வீரர் என்ற சாதனையையும் வைபவ் சூர்யவன்சி படைத்திருக்கிறார். அதேபோல் 17 பந்துகளில் அரைசதம் விளாசி இந்த சீசனில் அதிவேக அரைசதம் விளாசியவர் என்ற சாதனையையும் படைத்தார். 

தற்போது ஐபிஎல் வரலாற்றில் மிகவும் இளம் வயதில் ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர் என்ற சாதனையையும் வைபவ் சூர்யவன்சி படைத்திருக்கிறார். வைபவ் சூர்யவன்சியின் ஆட்டத்தால் உலக கிரிக்கெட்டே வைபவ் சூர்யவன்சியை பாராட்டி வருகிறது. இதனால் சச்சின் டெண்டுல்கரை போல் வைபவ் சூர்யவன்சி உருவாகுவார் என்று நம்பிக்கை சொல்லப்பட்டு வருகிறது. 

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles