போனது போகட்டும் விடுங்க.. நம்பிக்கையோடு இனி ஒன்னா வெற்றி பெற ஆரம்பிப்போம்.. மும்பை அணிக்கு நம்பிக்கை தரும் பும்ரா

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் மும்பை அணிக்கு மீண்டும் திரும்பிய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா உத்வேகம் தரும் சில விஷயங்கள் கூறியிருக்கிறார்.

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தோடு மொத்தமாக நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. இந்த முறை 10 அணிகளும் வலுவாக இருப்பதால் ஒரு ஒரு போட்டியிலும் வெற்றி பெறுவது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் சிறப்பாக இருந்தாலும், வெற்றி பெறுவதில் அந்த அணிக்கு இன்னும் சிக்கல்கள் நீடித்துக் கொண்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில் நேற்றைய போட்டியின் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் பும்ரா மும்பை அணி குறித்த சில விஷயங்கள் பேசி இருக்கிறார். இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “மும்பை அணிக்கு மீண்டும் திரும்பி இருப்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது. இருந்தாலும் இன்றைய போட்டியில் நாம் தோற்று விட்டோம். டி20 கிரிக்கெட் பொறுத்த வரை இப்படித்தான் செல்லும். இன்னும் நமக்கு போட்டிகள் மீதம் இருக்கிறது எனவே வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க:தோனி இந்த 2 விதத்தில் பேட்டிங் செய்ய வருவார்.. எப்படி வந்தாலும் அவருக்கு எங்க திட்டம் பக்காவா இருக்கு – பஞ்சாப் கிங்ஸ் வீரர் பேட்டி

நிச்சயமாக நாம் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் கடந்த சில போட்டிகளாக நாம் அபாரமான கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம். டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் மூலமாக நாம் அனைவரும் இணைந்து ஒன்றாக ஆரம்பிப்போம். நாம் அனைவரும் நம்பிக்கையை மட்டும் கைவிடாமல் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு நிச்சயம் பெரிய திருப்பமுமணியை ஏற்படுத்திக் கொடுப்போம்” என்று உத்வேகம் தரும் கருத்துக்களை பேசி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles