தோனி இந்த 2 விதத்தில் பேட்டிங் செய்ய வருவார்.. எப்படி வந்தாலும் அவருக்கு எங்க திட்டம் பக்காவா இருக்கு – பஞ்சாப் கிங்ஸ் வீரர் பேட்டி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாட உள்ளன.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சென்னை வீரர் மகேந்திர சிங் தோனி குறித்து பஞ்சாப் கிங்ஸ் வீரர் யுஸ்வேந்திர சஹால் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டும் வெற்றியும், மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் தற்போது 9 இடத்தில் இருக்கிறது. எனவே இன்று நடைபெற உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டியது சிஎஸ்கே அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதே நேரத்தில் பஞ்சாப் அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளும் வலுவாக இருப்பதால் சிஎஸ்கே அணிக்கு நிச்சயம் நெருக்கடி கொடுக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் பஞ்சாப் அணியின் சுழற் பந்துவீச்சாளரான யுஸ்வேந்திர சஹால் இந்திய அணியில் மகேந்திர சிங் தோனியின் கீழ் விளையாடிய போது அவர் தனக்கு நல்ல ஆலோசனைகள் வழங்கியதாகவும், அதனால் தான் சிறப்பாக செயல்பட முடிந்தது எனவும், அவர் ஓய்வு பெற்ற பிறகு சரியான ஆலோசனைகளை வழங்க தனக்கு ஆள் இல்லாததால் தான் சிரமப்பட்டதாகவும் வெளிப்படையாக அவரே கூறியிருந்தார். இந்த சூழ்நிலையில் அவர் களமிறங்கப் போவது குறித்து சகால் சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் பந்து வீசுவதை தோனி ஸ்டம்ப்களுக்கு பின்னால் பல ஆண்டுகளாக பார்த்திருக்கிறார். நான் எப்படி பந்து வீசுவேன், என்ன விதத்தில் பந்து வீசுவேன் என்று அவர்கள் நன்றாக தெரியும். ஆனால் அவர் என்ன நினைக்கிறார் என்பது குறித்து எனக்கு மூன்று முதல் நான்கு சதவீதம் மட்டுமே தெரியும். தோனி முதல் பத்து ஓவர்களுக்குள் பேட்டிங் செய்ய வருகிறார் என்றால் நாங்கள் பந்து வீச்சில் தாக்குதலை கொடுக்க வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க:சென்னை, மும்பை இல்ல.. பார்க்க சிம்பிளா இருந்தாலும் இந்த அணி தான் சிறந்த கிரிக்கெட் அறிவைக் கொண்டது – சவுரவ் கங்குலி பாராட்டு

அதுவே இறுதிக்கட்டத்தில் வருகிறார் என்றால் அவருக்கு என்ன செய்வது என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். அந்த நேரத்தில் அவருக்கு எளிதான பந்துகளை கொடுக்க முடியாது. கொடுத்தால் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதையும் நாங்கள் அறிவோம். எனக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை நன்றாக தெரியும். அவர் வீரர்களுக்கு நன்றாக சுதந்திரம் கொடுக்கக் கூடியவராக இருக்கிறார். எப்போது எது குறித்து வேண்டுமானாலும் அவரிடம் ஆலோசிக்கலாம். எப்போதும் அவரது கதவுகள் திறந்திருக்கும். எதிர் அணி எவ்வளவு ரன்கள் அடித்தாலும் அது குறித்து அவர் பீதி அடைய மாட்டார்” என்று பேசி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles