ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை.. அம்பயராகும் பஞ்சாப் கிங்ஸ் வீரர்.. விராட் கோலி, ரவீந்திர ஜடேஜாவுடன் உலக கோப்பையை வென்றவர்.. இந்தியன் பிரிமியர் லீக்கில் நடுவர்

2025 ஆம் வருடத்தின் ஐபிஎல் சீசன் நாளை மறுநாள் தொடங்க இருக்கிறது. இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத இருக்கின்றன. கோலாகலமான துவக்க விழாவுடன் முதல் போட்டி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ளும் 10 அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

- Advertisement -

மேலும் பல ஐபிஎல் அணிகளில் வீரர்கள் மாறி இருப்பதால் இந்த வருடத்திற்கான தொடர் பரபரப்பாகவும் புதுமையாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் வரலாற்றிலேயே துரதிஷ்டவசமான அணியாக கருதப்படுவது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியாகும். கடந்த 17 வருடங்களில் அந்த அணி ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உலகின் தலைசிறந்த வீரர்கள் அந்த அணிக்காக விளையாடியும் அவர்களால் கோப்பையை வெல்ல முடியாதது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

- Advertisement -

17 வருட கோப்பைக்கான தேடலை இந்த வருடம் முடிவுக்கு கொண்டு வரும் முனைப்பில் பெங்களூர் அணி வீரர்கள் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த வருட ஐபிஎல் தொடருக்காக பெங்களூர் அணிக்கு புதிய கேப்டனாக ரஜத் பட்டிதார் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரது தலைமையில் நிச்சயமாக கோப்பையை வெல்வோம் என அணியின் முக்கிய வீரரான விராட் கோலி தெரிவித்துள்ளார். இத்தகைய பரபரப்புகளுக்கிடையே ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பமாக இருக்கிறது. மேலும் இந்த வருட ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வரலாற்று நிகழ்வு ஒன்றும் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

ஐபிஎல் வரலாற்றிலேயே முதல்முறையாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய ஒரு வீரர் ஐபிஎல் போட்டிகளுக்கு அப்பயராக நியமிக்கப்பட இருக்கிறார். உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் தன்மய் ஸ்ரீவத்சவா. டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான இவர் 2008 ஆம் வருடம் விராட் கோலி தலைமையில் அண்டர் 19 உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் சார்பாக அதிக ரன்கள் சேர்த்த வீரரும் இவர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2008 ஆம் வருட ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக 7 போட்டிகளில் இவர் பங்கேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 90 முதல் தரப் போட்டிகளில் விளையாடியிருக்கும் ஸ்ரீவத்சவா 4918 ரன்கள் சேர்த்திருக்கிறார். இதில் 10 சதங்களும் 27 அரை சதங்களும் அடங்கும். முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற இவர் பிசிசிஐ பயிற்சியாளருக்கான சான்றிதழ்களை பெற்று ஆர்சிபி அணியில் இளம் வீரர்களை கண்டறியும் ஸ்கவுட் பிரிவில் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் ஜம்மு காஷ்மீர் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக பணியாற்றி வந்த ஸ்ரீவத்சவா பிசிசிஐ நடத்திய அம்பயர்களுக்கான லெவல் 2 தேர்வை வெற்றிகரமாக முடித்துவிட்டு தற்போது ஐபிஎல் போட்டிகளுக்கு அம்பயராக பணியாற்ற இருக்கிறார். தன்னுடன் விளையாடிய ரவீந்திர ஜடேஜா மற்றும் விராட் கோலி போன்ற வீரர்கள் ஐபிஎல் தொடரில் முன்னணி வீரர்களாக விளையாடி வரும் நிலையில் அதே போட்டியில் நடுவராக பணியாற்ற இருக்கிறார் தன்மய் ஸ்ரீவத்சவா

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles