இந்தியா கூட இல்ல.. அவங்க கூட தோத்ததுல தான் செமி பைனல் போக முடியல.. இல்லனா கதையே வேற .. பாபர் வருத்தமான பேட்டி.!

தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்று நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தது. இந்நிலையில் டாஸ் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதால் அந்த வாய்ப்பும் பறிபோனது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 337 ரன்கள் எடுத்தது. அந்த இலக்கை துரத்தி ஆடிய பாகிஸ்தான் 244 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் பாகிஸ்தான் அணியின் உலகக்கோப்பை கனவு முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த உலகக் கோப்பையின் தொடக்கத்தில் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்புள்ள அணியாக கருதப்பட்ட பாகிஸ்தான் தற்போது உலக கோப்பையில் இருந்து வெளியேறி இருப்பது அதன் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

உலக கோப்பையை சிறப்பாக தொடங்கிய பாகிஸ்தான் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுடன் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தியாவுடன் நடைபெற்ற போட்டியில் ஏழு கேள்விகள் வித்தியாசத்தில் முதல் தோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் மற்றும் சவுத் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்தது. இதனால் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியானது.

- Advertisement -

இந்நிலையில் பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் வெற்றி பெற்று மீண்டும் அரை இறுதி வாய்ப்பை புதுப்பித்துக் கொண்டது பாகிஸ்தான் அணி. எனினும் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதால் பாகிஸ்தான் அணிக்கு மீண்டும் சிக்கல் உருவானது. அந்த அணி இங்கிலாந்து அணி உடன் நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தால் குறைந்தது 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டது.

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ததால் பாகிஸ்தான் அணியின் அரை இறுதிக் கனவு தகர்ந்தது. எனினும் ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்புவார்களா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய இங்கிலாந்து அணியுடன் போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து பாகிஸ்தான் செல்கிறது அந்த அணி. இந்நிலையில் போட்டிக்கு பின் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பாகிஸ்தான் அணியின் உலகக்கோப்பை பயணம் குறித்து பேசினார் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் ” மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. தென்னாபிரிக்கா அணியுடன் சென்னையில் நடைபெற்ற போட்டியை வெற்றி இன்று நிலைமை வேறு மாதிரியாக இருந்திருக்கும். ஆனால் இந்த தொடரில் நாங்கள் பல தவறுகளை செய்து விட்டோம். டேட்டிங் பௌலிங் மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் தவறு செய்தோம். இந்தப் போட்டியில் கூட 20 முதல் 30 ரன்கள் அதிகமாக வழங்கி விட்டோம். நாங்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசாமல் ரன்களை வாரி வழங்கினோம்” என தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” எங்களுடைய சுழற் பந்துவீச்சாளர்கள் இந்த உலக கோப்பை தொடரில் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. ஆட்டத்தின் நடுப்பகுதியில் சுழற் பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்கவில்லை என்றால் அது போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவே எங்கள் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. இந்த தோல்வி தொடர்பாக பாகிஸ்தான் சென்று அமர்ந்து பேசுவோம். இந்த உலகக் கோப்பையில் பாசிட்டிவான விஷயங்களை எடுத்துக் கொள்வோம் தவறான விஷயங்களை சுட்டிக் காட்டுவோம். நிச்சயமாக நான் என்னுடைய அனுபவத்திலிருந்து கேப்டனாக தொடரவே விரும்புகிறேன்” என தெரிவித்திருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles