2023 ஆம் ஆண்டின் உலகக் கோப்பையில் இலங்கை அணி இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. மேலும் அந்த அணி 2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் தகுதியையும் இழந்திருக்கிறது. தற்போது புள்ளிகள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது இலங்கை அணி.
இலங்கை அணியின் மோசமான விளையாட்டின் காரணமாக அந்த நாட்டின் அமைச்சர் ரோஷன் ரண சிங்கே இலங்கை கிரிக்கெட் வாரியத்தை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார். மேலும் இது தொடர்பாக இடைக்கால கமிஷன் ஒன்றையும் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அன்னாற்று நீதிமன்றம் தடை விதித்தது. இது தொடர்பான பிரச்சனைகள் நடைபெற்று வரும் நிலையில் இலங்கை அணிக்கு எதிராக ஐசிசி அதிரடி முடிவு எடுத்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஐசிசி மெம்பர்கள் இலங்கை அணி ஐசிசி யின் விதிமுறைகளை மீறியதாக கூறி இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். இது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது இடைநீக்கம் பற்றிய அறிவிப்பை ஐசிசி வெளியிட்டு இருந்தாலும் அது தொடர்பான முடிவுகள் மற்றும் எவ்வளவு காலம் இந்த இடை நீக்கம் இருக்கும் என்பது தொடர்பான தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என ஐசிசி அறிவித்திருக்கிறது.
மேலும் இந்த இடை நீக்கம் தொடர்பாக அறிக்கையை வெளியிட்டு இருக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ” ஒரு கிரிக்கெட் அணியும் அதன் நிர்வாகத்தையும் நிர்வகிப்பதற்கான அடிப்படை தகுதிகளை இலங்கை கிரிக்கெட் வாரியம் இழந்துவிட்டதாக ஐசிசி தெரிவித்துள்ளது. மேலும் கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் எந்த தலையிடும் இருக்கக் கூடாது என்ற அடிப்படை விதியை இலங்கை கிரிக்கெட் வாரியம் மீறியதாகவும் ஐசிசி யின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது”.
இதன் காரணமாகவே முன்னாள் உலக சாம்பியன் இலங்கை அணி ஐசிசி யின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான பெரு தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் எனவும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே கிரிக்கெட்டில் பெரும் சரிவை சந்தித்து வரும் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு இது மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் வாரியம் பெரும் பொருளாதார சிக்கலில் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த இடை நீக்கம் பாரம்பரியமிக்க இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கை அணி உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது. மேலும் இலங்கையில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியிலும் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
2019 ஆம் ஆண்டு நிறவெறி தொடர்பாக ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் சர்வதேச கவுன்சிலின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. எனினும் சில காலங்களிலே ஜிம்பாப்வே மீண்டும் அடிப்படை உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டது. இதுபோல இலங்கை கிரிக்கெட் வாரியமும் விரைவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இடம்பெறும் என அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.

