தற்போது நடைபெற்று வரும் 13 வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கின்றன. அரை இறுதியில் விளையாட இருக்கும் நான்கு அணிகளும் ஓரளவு முடிவாகிவிட்ட நிலையில் இன்னும் நான்கு லீக் ஆட்டங்கள் மீதி இருக்கிறது. எனினும் இந்த ஆட்டங்கள் அரை இறுதியில் பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தாது. ஏதேனும் அதிசயமான நிகழ்வுகள் நடைபெற்றால் மட்டுமே அரை இறுதியில் மாற்றங்கள் இருக்கும்.
இந்த வருட உலகக்கோப்பையில் அரையிறுதி போட்டிகளில் விளையாட இருக்கும் அணிகள் ஓரளவு முடிவு செய்யப்பட்ட நிலையில் இறுதிப் போட்டியில் விளையாடும் அணிகள் எவை.? எந்த அணிக்கு உலகக் கோப்பையை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.? இந்த உலகக்கோப்பையில் அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் எடுக்கக் கூடிய வீரர்கள் யார்.? என்பது போன்ற கணிப்புகள் தற்போது கிரிக்கெட் விமர்சகர்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரும் ஆஸ்திரேலியாவின் உலகக்கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்ற முன்னாள் ஆல்ரவுண்டரான ஷேன் வாட்சன் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடும் அணிகள் பற்றிய தனது கணிப்பை தெரிவித்திருக்கிறார். இவர் 2007 மற்றும் 2015 உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணியில் முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பையில் வர்ணனையாளராக பணியாற்றி வரும் இவர் நேற்றைய போட்டி துவங்குவதற்கு முன்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடும் இரண்டு அணிகள் பற்றிய தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார்.
இது தொடர்பாக பேசியிருக்கும் அவர்” இந்த வருட உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எட்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் அவர்கள் அரை இறுதிப் போட்டிகளுக்கு முன்னேறி இருப்பதோடு தொடர்ந்து புள்ளிகள் பட்டியலிலும் முதலிடம் வகித்து வருகிறது . மேலும் நெட் ரன் ரேட்டிலும் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்கிறது” என குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” ஆஸ்திரேலியா இந்த உலகக் கோப்பையை சிறப்பான வகையில் தொடங்கவில்லை. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகளிடம் தோல்வியை சந்தித்தது. எனினும் அதற்குப் பிறகு நடைபெற்ற ஆறு ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. தொடர்ச்சியாக அனைத்து துறைகளிலும் ஆஸ்திரேலியாவும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எனவே இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தான் இறுதிப் போட்டியில் சந்திக்கும் என்பது என்னுடைய கணிப்பு” என தெரிவித்திருக்கிறார்.
தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளும் பலமாக இருந்தாலும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தான் இறுதிப் போட்டியில் விளையாடும் என்பது தன்னுடைய கணிப்பு என தெரிவித்திருக்கிறார் வாட்சன். ஆஸ்திரேலியா அணி இதுவரை உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடு இருக்கும் தரவுகளை வைத்து பார்க்கும் போது அவர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் விளையாடும் எனவும் தெரிவித்திருக்கிறார். இந்த இரண்டு அணிகளில் ஒருவனிக்கு தான் கோப்பை எனவும் தெரிவித்திருக்கிறார் அவர்.
இதுவரை ஆஸ்திரேலியா அணிக்காக 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் வாட்சன் 3731 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் 4 சதங்களும் 24 அரை சதங்களும் அடங்கும். 190 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியிருக்கும் வாட்சன் 5,757 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒன்பது சதங்களும் 33 அரை சதங்களும் அடங்கும். மேலும் 58 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி இருக்கும் இவர் 1462 ரன்கள் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

